மதுரை (தேனி ,திண்டுக்கல்
உள்ளிட்ட ) மாவட்ட மக்களுக்கு ஒருசிறப்பு குணம் உண்டு. மக்கள் .பேசும்போது எதுகை
மோனையாய் இரட்டைக்கிளவி ,அடுக்குத்
தொடராய் ,நேரும்
முரணுமாய் வெளிப்பட
இன்றும் கேட்கலாம் !இது அந்த மண்ணோடு கலந்த குணம்!
எளிதில் உணர்ச்சி வசப்படும் வெள்ளந்தி மக்கள் பிறந்த இம்மதுரை மண்ணில் பிறந்த வடிவேலு ,சேரன் போன்றோர்இம்மண்ணின் மொழியை பயன்படுத்தியதில் ஆச்சரியம் இல்லை
.இம்மண்ணில் பிறந்த பெண்ணிடம் பேச்சுக் கொடுத்துப்பாருங்கள்.அடுக்குஅடுக்காய்
சொற்களை அள்ளி வரலாம்.
"இந்தா
எனக்கு வெளம் வந்துச்சுன்னா எகனைமொகனையா (எதுகை மோனையாய்) கேட்டுப் போடுவேன் ,அப்புறம் அறம் புறமாய் (அறத்திற்கு
எதிராக) ஆயிரும் பாத்துக்க " என்று அறச் சீற்றத்தை கேட்கலாம்.
இப்படியானவற்றுள்
ஒன்று தான் "குண்டக்க மண்டக்க
". இதன் நேர்பொருள் குண்டிக்கு கீழ் மண்டை.மறைபொருள் -எதிர் மறையான , ,தலைகீழாக ,என்று அர்த்தம் கொள்ளலாம்.
எண்சான்
உடம்புக்கு சிரசே பிரதானம் என்பர்.தலை கீழாக குண்டி மேலாக ஒருவன் வந்தால் எப்படியோ
அவன் பேச்சும் செயலும் வெறுக்கத் தக்கதே .
தலைகனத்தவன்,மண்டைவீங்கியவன்(மிகுந்த அறிவாளியாக கருதிக்
கொள்பவன் ) ,குண்டிபெருத்தவன்
(நிற்காமல் உட்கார்ந்தே பழகியவன் )குனிந்து ,நிமிர்ந்து ,சமயங்களில் உட்கார்ந்தும் ,நின்றும் பார்க்கும் விவசாய வேலைக்கு
சரிப்பட்டுவருவானா?அந்த
மாவட்டத்தின் முதன்மையான தொழிலே விவசாயத்துக்கு இப்படியான ஆள்கள் ஒத்துவருவார்களா?சிந்திக்ககூடிய மண்டை இருக்கும்
இடத்தில் உட்காருவதர்கான குண்டி இருந்தால் செயலூக்கம் இருக்குமா?இந்த இடத்தில் குண்டி என்பது நாறும்
தன்மை உள்ள ,கொச்சையான
சிந்தனையையும் குறிக்கும்.! வறட்டுத்தனமாநேருக்கு மாறாகொச்சையாய் சவடால்பேசுவதை குறிப்பதே இந்த குண்டக்க
மண்டக்க ! எதோ போறபோக்கில் சொன்ன சொல்லுக்கு இத்தனை அர்த்தமா,விளக்கமா என்று கேட்கலாம்.இதுதான்
பாமரமக்கள் மொழியின் தன்மை!மொழியை வாழவைக்கும் தன்மை.!இப்படி நிறைய வார்த்தைகள்
உண்டு.
இசகுபிசகு-இதுவும்
நேர் முரண் வார்த்தை தான். .இதன் பொருள் இசைக்கு பிசகாக -சுபசுரத்திற்கு அபசுரமாக என்று மணிப்பிரவாளத்தில்
சொன்னால் எளிதில் விளங்கும்!இப்படியான பாமரத்தமிழ் தான் படைப்பை மேம்படுத்தும்
.மொழியை காத்து நிற்கிறது.
No comments:
Post a Comment