Sunday, 21 August 2022

கன்னித்தீவு [ஜனநேசன்]

                               கன்னித்தீவு    [ஜனநேசன்] 

    கையில் உறையும் ,முகத்தில் கவசமும்  அணிந்து செய்தித்தாளை விரித்தேன்.   தலைப்புச் செய்தியே  அதிர்ச்சியாக இருந்தது. நேற்று இந்திய  சீன  எல்லையில்  மூவர்  இறந்தததாக செய்தி. இன்று    இருபது இருபது  இராணுவ வீரர்கள்  வீரமரணம். சீனத் தரப்பில் நாற்பதுக்கு மேற்பட்டவர்கள்  இறந்திருக்கலாம்  என்ற  தகவல். இத்தனைக்கும்  துப்பாக்கியோ ,பீரங்கி தாக்குதலோ  இல்லை. வெறும்  கைகலப்பும்  தள்ளு முள்ளு தானாம். இந்தியத்  தரப்பு வீரமரணம் . சீனதரப்பு சாவு என்ற  சொல்லாடல்களுக்குப் பின்னுள்ள  கருத்தாடல்  ரணமாக உறுத்தியது. மேலே  சுழலும்  காற்றாடியில்  செய்தித்தாளைப்  போலவே  என் மனதும்  படபடக்க  நினைவு பால்யத்துக்கு   அலைந்தது.

                              **********

   1962 இல்  நடந்த சீன படையெடுப்பின்  போது , நான்  மூன்றாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன்.. அப்போதெல்லாம்  காலையில் எழுந்ததும் பல்லைத்  துலக்கி  காபியை  குடித்ததும்  பொதுகக்கூசுக்கு  ஓடுவேன். காலைக்கடனை  முடுச்சிட்டு வீட்டுக்கு திரும்பும் வழியில்  சலூன் கடைக்குப்போய்  முதல் வேலையாய்  தினத்தந்தியில் கன்னித்தீவு  வாசிப்பேன். மூணாம் பக்கத்தில் தலைப்பில் அச்சாகி  இருக்கும் அந்த நாலு படமுள்ள  பதினாறு வார்த்தைகளை வாசிக்க என்போன்ற சிறுவர்கள்  பல உத்திகளைக் கொண்ட போரே  நடத்த வேண்டியிருக்கும். இப்படி  கன்னிதீவுக்கான  காத்திருப்பு  பொழுதில் தான்   இந்திய எல்லையில்  சீன ராணுவம் அத்துமீறி ஊடுருவல். பிரதமர் நேரு ,    ராணுவமந்திரி ,தளபதிகளோடு  அவசர ஆலோசனை என்ற செய்தியை வாசித்தேன்.

    அன்று  பள்ளியில்  இறைவணக்கம்  பாடுவதற்கு முன் தலைமை ஆசிரியர் சொல்ல , சீனர்கள் தாக்கியதில் வீரமரணம்  அடைந்தவர்களுக்கு  மௌன அஞ்சலி செலுத்தினோம்.   மௌனமாகவே  வகுப்புக்கு செல்லுமாறு சொன்னார்கள்.  சரித்திர ஆசிரியர் சரோஜா டீச்சரிடம் கேட்டேன் .” டீச்சர் , சீனாக்காரர்கள்  நம்ம எல்லையைத் தாண்டி  வந்து  தாக்கும்போது  நம்ம வீரர்களும்  கத்தியைக் கொண்டு  தாக்கி                   இருப்பார்கள் இல்ல. சீனாக்காரங்களும் செத்துருப்பாங்க இல்ல.”    

    ”“நம்ம கருப்புவெள்ளை எம்ஜிஆர்  சினிமாவில காட்டறமாதிரி  கத்திச்சண்டை போடமாட்டாங்க. வீரபாண்டிய கட்டபொம்மன் கலர் சினிமாவில் காட்டுற மாதிரி   துப்பாக்கி ,பீரங்கிகள் கொண்டு சுடுவாங்க. சீன ராணுவம் நவீன ஆயுதங்கள் கொண்டு தாக்கினதினால  நம்ம பக்கம் உயிர்ச்சேதம்  அதிகமுன்னு  சொல்றாங்க.”                                                                 “ஏன் டீச்சர் . நம்ம வீரர்களும்  துப்பாக்கி வச்சிருந்திருப்பாங்க  இல்ல “ என்று  சந்திரன் கேட்டான்.  “ ஆமாம் “                                                    நான்  கேட்டேன் ,” டீச்சர் , நம்ம வீரர்கள் வீரமரணம்  அடைந்தார்கள்ன்னு  சொல்றாங்க . அவுங்க வீரர்கள்  செத்தார்கள்ன்னு  சொல்றாங்க .ரெண்டும் வேற வேறையா.”    

“ அது அப்படித்தான் .சும்மா தொணத் தொணன்னு  கேட்கக்கூடாது , உட்காரு. இன்னைக்கு  கவுதம புத்தர் நடத்தணும் .எல்லாரும் கவனிங்க.” என்று  பாடத்தைத்   தொடங்கினார்.

     அடுத்த  பாடவேளையில்  பியூன்  பழனி  சுற்றறிக்கை கொண்டு வந்தார். கிருஷ்ணவேணி  டீச்சர் படிச்சு பார்த்துட்டு  சொன்னார் “.நாளைக்கு  மத்தியானம் இரண்டு மணிக்குதான் பள்ளிக்கு வரணும். யுனிபார்ம்  இல்லை. நல்ல டிரெஸ்ஸா  போட்டுக்கிட்டு வாங்க .ராஜலிங்கம் மன்ற மைதானத்தில் எல்லா ஸ்கூல் பிள்ளைகளும் ஊர்வலமாகப் போய்      சப்-கலெக்டர் , டிஎஸ்பி ,மாவட்டக் கல்வி அதிகாரிகள் , முன்னிலையில் நமது தேசபக்தியைத்  தூண்டும் விதமாகவும் ,நமது ராணுவவீரர்களுக்கு  உற்சாகமூட்டும் விதமாகவும்  கலை நிகழ்ச்சி நடக்குது. எல்லாரும் தவறாம அவுங்கவங்க பெற்றோரை சாயந்திரமா  மைதானத்துக்கு வரச் சொல்லிருங்க.” என்றார் 

  .நாளைக்கு  அரை நேரம் லீவு. அரை நேரம்  ஜாலியா கலர்டிரெஸ் போட்டுகிட்டு   கலை நிகழ்ச்சியில்  கலந்துக்கலாம்.  என்ற  குதுகலத்தில் எல்லோரும் ஆரவாரம் செய்தோம்.” உஷ். இது கொண்டாட்டம் இல்லை. இது  நம்ம தேசத்துக்கு மரியாதை செய்யிற நிகழ்ச்சி.” என்றார் கிருஸ்ணவேணி டீச்சர். அவர் சொன்னவிதம்  வித்தியாசமாக  இருந்தது.. நாங்கள்   மௌனமானோம். .

    மறுநாள் ,எல்லோரும் அவரவருக்கு பிடிச்ச துணிமணிகள் அணிந்து வந்திருந்தார்கள். தலைமை ஆசிரியர் முதல்  எல்லா ஆசிரியர்கள் கண்காணிப்பில் இரண்டிரண்டு பேர்  வரிசையாக  தேசியக்கொடி பிடித்து ஊர்வலம் ஜவகர்பஜார் வழியாக  புறப்பட்டு  ரெண்டு மைல்  தொலைவில்  ராஜலிங்கம் மன்ற மைதானத்தை அடைந்தது. ஊர்வலத்தில் ஜெயஹிந்த் , வந்தே மாதரம், கோஷங்களையும். “ சிங்க நாதம் பாயுது, சீன நாதம் ஓடுது “ என்ற பாடலையும்   அந்தந்த வகுப்பாசிரியர்கள் பாட  மாணவர்கள்  பின்னால் பாடிக்கொண்டே  நடந்தோம்.

மைதானத்தில்  பெரிய அளவிலான  இந்திய வரைபடம்  வரைந்து இருந்தார்கள் . அதில் நாங்கள்  நின்றது  வண்ணமயமான  இந்தியாவை  வெளிப்படுத்துவதாக  கரூர்  சப் கலெக்டர்  சொன்னார். இந்தியில்               ‘ நேர் நில் ,தளர்வாய் நில்’  சொன்னார்கள் ,அவ்வாறே  செய்தோம்.            “சிங்க நாதம்  பாயுது ;  சீன  நாதம்  ஓடுது “,.                                        “சின்னக் கைகள் பத்திரம் பத்திரம் ;                                         பேசுவாய்  நல்லவை  மாத்திரம் .                                                     நாட்டுக்கு நீ நலமுடன் சேவை செய்வதே  மந்திரம் “. என்ற பாடல்களுக்கு  மேடையில்  பாடி  இருவர்  ஆடுவதுபோல் நாங்களும்  ஆடினோம். அப்புறம்  நமது  நாட்டின்  ஒருமைப்பாட்டுக்காக   பாரதியார் போன்றவர்களின்  பாடல்களைப் பாடினர். வெல்க , “வெல்கவே   நமது  இந்திய வீரர்களின் தீரம்.” என்றும் எல்லோரும்  கைகள் உயர்த்தி “ஜெயஹிந்த் “ முழங்கினோம். இந்த நிகழ்ச்சியும் ,மேடையில் பேசப்பட்ட பேச்சுகளும், பாடல்களும் ,பேண்டு வாத்திய இசையும்    எங்களுக்கு      புது உற்சாகத்தையும்  ,நம் நாட்டின் மீது  மரியாதையும்  உணர்த்தியது. நிகழ்ச்சி  ஐந்து மணிக்கு  முடிந்தது.  பெரும்பாலான  பெற்றோர்கள்  வரவில்லை . பள்ளிக்குத்  திரும்பி  அங்கிருந்து  நான்கைந்து பேராக சேர்ந்து  வீடு திரும்பினோம்.

   டீக்கடைகளில் நிறையப்பேர்  கூடி  ரேடியோவில் ஆகாசவாணி  சிறப்புச்செய்திகள்  கேட்டபடி   இருந்தனர். ஒவ்வொருத்தரும்  முகத்தை  கடுகடுப்பாக வைத்துக்  கொண்டு  ஆவேசமாகப்   பேசினார்கள். இந்த பேச்சில் கட்சி வேறுபாடின்றி   ஒன்றுபட்டிருந்தனர் .தேசியக்கொடியோடு  கூட்டம் கூட்டமாய்  தெருத் தெருவாகப் போய்  நிதி திரட்டி                              சப்- கலெக்டர் மூலம்  அரசுக்கு  அனுப்பி வைத்தனர்.  

    யாரோ ஒருவன்  கரூர் முழுக்க வழங்கும் குடிநீர் தொட்டியில்  விஷம் வைக்க  ஏறினானாம்.. சீன உளவாளி என்று சந்தேகப்பட்டு போலீஸ் பிடித்துப் போனதாம்  ,என்று  பேச்சு பரவியது.  அச்செய்தி  வதந்தி  என்று போலீஸ்   தெருத் தெருவாக  மைக்கில்  அறிவித்த பின்தான்   குழாயில்  மக்கள்  குடிநீர் பிடித்தார்கள். ரயில்வே  தண்டவாளத்தில்  குண்டு  வைத்து விட்டார்கள்.  ஈரோடு  திருச்சி  ரயில்கள்  நிறுத்தப் பட்டதாகப்  பேசினார்கள். இரண்டாவது ஆட்டம்  சினிமா  நிறுத்திட்டாங்க. சீனாக்காரன் குண்டு போட   எரோப்ளானில்  வருவதாகக் கூறி  இரவு ஒன்பதுமணிக்கு  தெரு விளக்குகள்  அணைக்கப்பட்டன. ஊர் முழுவதும் ராத்திரியில் போலீஸ்  ரோந்து  சுற்றிக் கொண்டிருந்தது.  

    எங்களது  பக்கத்து வீட்டுக்காரர்  வீட்டை பூட்டிவிட்டு  ராத்திரியோடு ராத்திரியாக  எங்கோ போய்  விட்டார்கள். அவரை  போலீஸ் தேடிவந்தது. எங்கப்பாவிடம்  விசாரித்தார்கள். எங்களுக்கு  தெரியாது  என்று சொல்லிவிட்டோம். அவரைப் பற்றி ஏதாவது தகவல் தெரிந்தால் ஸ்டேஷனில்  சொல்லுங்கள்  என்று கண்டிப்பான குரலில் சொல்லி  போலீஸ் போனது. எங்கப்பாவிடம்  அம்மா விவரம்  கேட்டது. “அவரு கம்யுனிஸ்ட் கட்சிக்காரர் .அவரை  சீன ஏஜெண்டுன்னு  போலீஸ் நினைக்குது “ 

   “அவங்க குடும்பம்  நல்லகுடும்பம். தெருவில் எந்தப் பிரச்சினைனாலும்  முன்னால வந்து நின்னு உதவுவாரு. மளிகைக்கடை வச்சிருக்கிறவரே  விலைவாசி உயர்வு போராட்டதில ஜெயிலுக்கு போனாரு “ என்றது அம்மா .” மெல்லப்பேசு. போலீஸ்  காதில விழுந்திறப் போகுது. அவரோட  ஆதரவாளருன்னு நம்மலை  கூட்டிட்டுப் போயிரூவாங்க.”  வீடே  கப்சிப்பானது. எங்க தெருவில்  ஒருத்தரும்  வாய் திறக்கலை.

   பத்திரிகையில்  பக்கம் பக்கமாக  போர்ச் செய்திகள் வந்து கொண்டிருந்தன. நேரு  சோகம் தோய்ந்த முகத்தோடு  உறுதியான  வார்த்தைகளைப் பேசினார்.” இந்தப் போருக்கு  தயாராகாத நிலையில்  நம் வீரர்கள் தீரமாகப் போராடினார்கள். அவர்களது  தீரமும் தியாகமும்  போற்றத் தக்கது. இந்நிலையில்  ஏற்பட்ட பொருளாதாரச்  சவால்களை எதிர்கொள்ளப் பணம் படைத்தவர்கள்  தாராளாமாக  நிதியைத் தாருங்கள்.”

   பிரதமரின் வேண்டுகோளுக்கு  இணங்க  நமது தமிழ்நாட்டு செல்வந்தர் களும் ,நடிகர் நடிகைகளும்  நிதி வழங்கிய பட்டியல்   போட்டோவோடு வந்தது. அரசியல் தலைவர்களும் நிதி வசூலித்துக் கொடுத்தனர். நமது  நடிகர்கள் நடிகைகள் குழு  எல்லைப்பகுதிக்கு சென்று ராணுவவீரர்களை  உற்சாகப் படுத்திய போட்டோ செய்திகளும் வெளியாகின.

   சீனாவிடமிருந்த  நவீன ஆயுதங்களும் , போர்வீரர்களுக்கான  பாதுகாப்பு கவசங்களும் நமது வீரர்களுக்கு போதுமான அளவு இல்லை. இந்தப்  போரில் ஏற்பட்ட பின்னடைவுக்கு  பொறுப்பேற்று  பாதகாப்பு மந்திரி  கிரிஷ்ணமேனன் பதவி விலகியதாக செய்தி வந்தது.    இனி  விவசாயத்துக்கும் ,உள்நாட்டுப் பாதுகாப்புக்கும் கொடுக்கும் முன்னுரிமை  நாட்டின் பாதுகாப்புக்கும் வழங்கப்படும்  என்று  நேரு  அறிவித்தார். தமிழ்நாட்டில் ராணுவடாங், ,துப்பாக்கித் தொழிற்சாலைகளும் தொடங்க இருப்பதாக செய்திகள்  வந்தன.

                ************

     இந்த  நினைவுகளோடு  பத்திரிகையைப் புரட்டினேன். கொரோனா தாக்கம் குறித்த செய்திகள் குறைந்து இருந்தன.  இந்திய பாதுகாப்புத் துறை  அமைச்சர்  நவீன ராணுவ விமானங்கள் வாங்க ரஷ்யாவுக்கு போகிறார் என்ற  செய்தி வந்திருந்தது.  இன்னொரு  கருத்துப்படம்  வந்திருந்தது .அதில் ஒரு செய்தியாளர்  பிரதமரிடம் கேட்கிறார் ,                            ,”பிரதமர் அவர்களே, 2024 ல் மறுபடியும் எல்லைப்பிரசினை இருக்குமா ?  ” பிரதமர்  மௌனமாக இருக்கிறார் .

கன்னித்தீவு படக்கதை இன்னும்  முடியவில்லை.

[ஆகஸ்ட் ௨௦௨௦- புதிய ஆசிரியன் .]

லத்தி [ஜனநேசன்]

           லத்தி      [ஜனநேசன்]    

    கோடை விடுமுறை  முடிந்து  பள்ளி திறக்கப்பட்டது. நாற்பது நாள்களாக   பள்ளியை  மறந்து  இருந்ததால்  விரிந்த  சிறகுகளைச் சுருட்டி, மனசுக்குள்  மறைத்து   வகுப்புக்குள்  நுழைவது  வருத்தமாகத் தான்  இருந்தது .வெளிச் சுவரிலிருந்து  உள்ளே வகுப்பறைச்  சுவர்கள்  வரை பளிச்சென்று  வெள்ளை அணிந்திருந்தது . வெளிவாசல் நுழைவு வளைவில் நீல வண்ண பின்புலத்தில்  வெள்ளை  எழுத்தில் பசுபதீஸ்வரா நகராட்சி உயர்நிலைப் பள்ளி , கரூர் . பி எம் எச் எஸ்  என்று  அடைப்புக் குறிக்குள்   இருந்தது. அந்த பள்ளியே  சீருடை அணிந்தது போலிருந்தது. செவ்வாகைபூக்களும், மஞ்சள் கொன்றைப் பூக்களும் ,அகன்ற இலை களுக்குள் மறைந்தும் மறையாமலும் கண் சிமிட்டிய கருஞ்சிவப்பு பாதாங்காய்களும்   மனதுக்கு இதமாக வரவேற்பு கூறுவது போல் இருந்ததன .                                                             ஆறாம் வகுப்பிலிருந்து எழாம் வகுப்புக்கு  போகிறோம்  என்ற சந்தோசம்  பள்ளி தந்த எல்லாச் சள்ளை  சடவுகளையும்  மறக்கச் செய்தது .           ‘ ஆண்டுத்தேர்வில்  தேர்வானவர்கள்  உயர் வகுப்பில் அவரவர் பிரிவில் ,  எ பிரிவு  மாணவர்கள் எ பிரிவிலும்  , பி பிரிவு மாணவர்கள்  பி பிரிவிலும்  என்ற விதத்தில்  அமருமாறு அறிவுறுத்தப்  படுகிறது  ‘ என்று தகவல் பலகை அறிவித்தது. என்  எழாம் வகுப்பு சி பிரிவுக்கு  யார் வகுப்பாசிரியர்  என்று  அறிய  ஆர்வம்  பொங்கியது.

எழாப்பிலிருந்து  எட்டாப்புக்கு  போகும் அண்ணன்களிடம் கேட்டோம். அவர்கள்  ஒவ்வொருவரும்  ஒவ்வொரு வாத்தியார் பேரு சொல்லி மனசைக் கலக்கினார்கள். தமிழ் வாத்தியார்  அம்மையப்பன்  வந்தால்  தமிழ் ,சரித்திர பூகோளப் பாடங்களை  கதை கதையாய்ச்  சொல்லி நடத்துவார். கணக்குவாத்தியார்  வைத்தியநாதன் வந்தால் கூட நல்லது தான்  அவர் சிரிக்க சிரிக்க  கணக்கும் ,இங்லிசும் சொல்லிக் குடுப்பார் . விஞ்ஞான வாத்தியார் அப்துல் சுபான் வந்தால் கூட கதைகளாகச் சொல்லி சிரிப்பு மூட்டி பாடம் நடத்துவார். ஆனால்  இந்த அண்ணன்கள் பயமுறுத்துறான்களே  என்று கவலை வதைத்தது .

வகுப்பறைக்கு போகும் முன்  .பள்ளி விளையாட்டு மைதானத்துக்குப்  போனோம். கால்பந்து, கூடைப்பந்து கம்பங்கள் வெள்ளையும் கருப்புமாய் புதியதாய் மினுக்கின. நாங்கள்  கபடி விளையாடும் மைதானம்  அமராவதி ஆற்று புதுமணல்  பரப்பி மணத்தது. .கால்கள் பரபரத்தன. விளையாடலாமுன்னு ஆசைதான். மணி  அடித்து விட்டது. வகுப்பறைக்குப் போனோம். வேப்பமரத்தின் கீழுள்ள வகுப்பறை. குளிர்ச்சியாய் வேப்பம்பூ வாசமடித்தது. ஓடிப்போய்  அவரவருக்கு பிடித்த வரிசையில்  உட்கார்ந்து கொண்டோம்.

ஆறாப்பில்  வகுப்பாசிரியராய்  இருந்த  அம்மையப்பன்  வந்தார். எங்களுக்கு  ரொம்ப சந்தோசம் .  எந்திருச்சு நின்னு  ஒரே குரலில்  வணக்கம் சார்  சொல்லி உட்காந்தோம். அம்மையப்பன் வாத்தியார்  பாஸான எல்லோருக்கும்  வாழ்த்து சொன்னார் .                                 ” பெரிய பிள்ளை களாயிட்டீங்க .நல்லா படிச்சு  பெத்தவங்களுக்கும் ,,எங்களுக்கும், பள்ளிக்கூடத்துக்கும், இந்த நாட்டுக்கும்  நல்ல பெயர் வாங்கித் தரணும். இனிமேல் தான்  உங்களுக்கு  புது நண்பர்கள் வருவார்கள்.  புது வகுப்பாசிரியர்  வருவார். எனக்கு  ஒத்துழைப்புக் குடுத்து எல்லாரும்  படிச்சு  பாஸான மாதிரி  அவருக்கும்  ஒத்துழைப்பு குடுக்கணும்” என்று சொன்னார்.                                          நாங்கள்   இறுக்கமாக  இருந்தோம். “ என்ன , புது வகுப்பாசிரியருக்கு  ஒத்துழைப்பு கொடுப்பீங்களா “ ன்னு  திரும்பவும்  கேட்டார். நாங்கள்   அமைதியாக  இருந்தோம்.

அவர்  என் முன் கை காட்டி ,” என்ன  சொல்லு .” எனக்கு  தொண்டை  அடைத்துக் கொண்டது. குரல்  வரவில்லை.  அவர் புருவத்தை உயர்த்தி  ஆள்காட்டி விரலை  ஆட்டினார். மெல்ல   தொண்டையைச்   சரி செய்து கொண்டு , “ நீங்க தான்   எங்களுக்கு  வகுப்பாசிரியரா  வரணும்   சார் “ என்று சொல்லுவதற்குள்  கண்ணீர்  உருண்டது. எல்லா மாணவர்களும்  ,நீங்கதான்  எங்களுக்கு  வகுப்பாசிரியரா வரணும் சார் . என்று குரல் எழுப்பினர்.     

“ ரொம்ப நன்றி. ஆனால்  வகுப்பாசிரியர்  யாருங்கிறதை  எச்,எம் தான்  முடிவு செய்வார் .”

“நாங்க எச் எம் சார் கிட்டப்   போய் பேசுறோம் சார் “ என்றேன். எல்லா மாணவர்களும்  எழுந்து  நின்றனர்.

“உட்காருங்க. ஆர்வக் கோளாறில்  எனக்கு கெட்ட பெயர் வாங்கி தந்துறா தீங்க”.

என்னை  எழுந்திருக்கச்  சொல்லி , “ புது வகுப்பாசிரியர்  வர்றவரை  நீதான்  இந்த வகுப்பு லீடர் . சத்தம்  வராமப்  பார்த்துக்க. நான்  எச்.எம்  ரூம் வரை  போயிட்டு  வர்றேன் “  வெளியே  போனார். எங்களுக்கு  ஏமாற்றமாக  இருந்தது.  பக்கத்தில்  இருந்தவர்கள் , நான் லீடர் ஆக்கப் பட்டதற்கு கைகுலுக்கி  மகிழ்ச்சி  தெரிவித்தனர்.  வகுப்பறைக்குள்  ,யார்  புதிய வகுப்பாசிரியர்  என்று கிசுகிசுப்புகள்  பரவி இருந்தது.

  கொஞ்ச நேரத்தில் , ஐந்து  மாணவர்கள்  எங்கள்  வகுப்பறைக்குள்  வந்தனர். அவர்களுள்  தேவதாஸ்  இருந்தான்.  அவன் ஆறாப்பிலே  எங்க கூடப் படிச்சவன்தான். அவுங்க அப்பா  போலீஸ்  ஏட்டாக  இருக்கிறார். அவனை எங்களோடு  விளையாட்டில்  சேர்த்துக் கொள்ளவில்லை என்றாலும் , நாங்கள்  சாப்பிடும்  தின்பண்டங்களை  அவனுக்குக்  கொடுக்கவில்லை என்றாலும் ,” எங்கப்பா  கிட்ட சொல்லி  லத்தி அடி வாங்கித் தந்திருவேன் ‘ என்று  மிரட்டுவான்.  அவன்  சுமாராத்தான்  படிப்பான். இந்த வருஷம்  எங்க வகுப்பில்  இல்லை எனத் தெரியவும் , அவன் வேற ஸ்கூலுக்குப் போயிட்டான்   என்றிருந்தோம் .. அவன்  போன வருசமே  சொன்னான் . எங்க அப்பா கிட்டச்  சொல்லி ,ஏழாப்பு எம்.எச் எஸ் க்கு போயிருவேன். இந்த கூரைக் கட்டிடத்தில் படிக்க மாட்டேன்னு  சொன்னான். எம்.எச்.எஸில்  நல்ல படிக்கிறவங்களை , அதிகாரிக பிள்ளைகளைத்தான்  சேர்த்துக்குவாங்கன்னு பேச்சு .இவனுக்கு  அந்த ஸ்கூலில்  கிடைக்குமாங்கிறது  சந்தேகம் தான். சரி  எப்படியோ எங்களை பயமுறுத்தாம தொலைஞ்சா போதும்  என்று சந்தோசப்பட்டோம் .படுபாவி  வந்திட்டானே  என்று  எங்கள்  நண்பர்களுக்கு வருத்தம்.

ஆபிஸ் பியூன்  கந்தசாமி  வந்தார். அவர்  ஐந்து மாணவர்களது  பெயர்களை வாசித்து  அவர்களை  டி பிரிவுக்குப்    போய்  உட்காரச் சொன்னார். கந்தசாமி  எங்கள்  தெருவில்தான்  குடியிருக்கிறார். அவர் பள்ளிக்கூடத்தை பற்றி எது கேட்டாலும் ,  தெரிந்ததைச்  சொல்லுவார். அவரிடம்  கேட்டேன். இன்னும்  யார்  வகுப்பாசிரியர் என்று முடிவாகவில்லை. புது சிலபஸ் கொண்டு வந்திருக்காங்க . நல்ல திறமையா வகுப்பு எடுக்கிறவங்களை ஒம்பது ,பத்து, பதினோராம் வகுப்புகளுக்கு  மாத்திட்டு  அடுத்த நிலையில்  உள்ளவர்களை அடுத்தடுத்த கீழ் வகுப்புகளுக்கு  போடுவார்கள்  என்று சொல்லிப்  பறந்தார். தலைமை ஆசிரியர் கூட்டம்  இருப்பதால் அன்று  அரைநேரம்  தான்  பள்ளி. எல்லோரும்  வீட்டிற்கு  குதியாட்டதோடு ஓடினோம்.

அன்று  இரவு ஏழுமணி வாக்கில் பியூன்  கந்தசாமி  வீட்டுக்குப் போனேன். ஏழாப்பு ‘ சி ‘கிளாசுக்கு  யாரு  வாத்தியாருன்னு  கேட்டேன். ரகோத்தம ராவ்  என்கிறவரை  போட்டுருக்காங்க. அவரு  போன வருசம் வரைக்கும்  இந்தி பண்டிட்டாக  இருந்தவர். இந்தி மொழியை பாடத் திட்டத்திலிருந்து  எடுத்திட்டாங்க . ரெண்டு  இந்தி பண்டிட்டுகளை  ரெண்டு கிளாசுகளுக்கு  வாத்தியார் ஆக்கிட்டாங்க  என்றார். சரி புது வாத்தியாரிடம்  புதுசா படிப்போமுன்னு  வந்திட்டேன். 

மறுநாள்  ரகோத்தம ராவ்  சார்  வகுப்புக்கு  வந்தார். தேங்காய் போன்ற பின் குடுமி  முடிந்திருந்தார். கன்னமெல்லாம்  நரைத்த முடியும் குங்குமப் பொட்டும் வெற்றிலை குதப்பிய  கரகரத்த குரலில்  ராகமாய்ப்  பேசும் பாணி எங்களுக்கு புதுசு. நாங்கள்  சந்தித்த  வாத்தியார்களை  விட  வித்தியாசமாக  இருந்தார். அவரது பின்னால்  வந்த ஒரு பையன்  ஒரு பிரம்பைக்  கொண்டு வந்து  மேஜையில்  வைத்துப்  போனான். அவரது  தோற்றத்தைப் பார்த்து அதிர்ந்து போயிருந்த  எங்களுக்கு  அவரது  பிரம்பை  பார்த்ததும்  பயம் பற்றிக் கொண்டு விட்டது. வகுப்பு  அசாதாரணமான  அமைதியில் ஆழ்ந்தது.

அவர்  ஒவ்வொரு மாணவராக எழுந்து  பெயரைச்  சொல்லப்  பணித்தார். ஒவ்வொருவரும்  நடுங்கும் குரலில்  மின்னலாக எழுந்து பெயர் சொல்லி அமர்ந்தனர் . அவர்  கரகரத்த குரலில் , “ பேஷ் ,முப்பது பேரும் நொடியில் சொல்லீட்டிங்க .இப்படித்தான்  சமர்த்தா படிக்கணும். நான்  உங்களுக்கு  இங்லிசும் , ஹிஸ்டரியும்  படிப்பிப்பேன் . இந்தக்  கிளாஸின்  முப்பது பயல்களும்  என் கண்ட்ரோல்.  கவனமா  படிக்கிறவர்களுக்கு  பேஷ் சொல்லுவேன். படிக்காதவங்க, வீட்டுப் பாடங்களைச் செய்யாதவங்க கிட்ட  எனக்கு பதிலாக  இந்த  பிரம்பு பேசும். இந்த பிரம்பை தினம் ஒருத்தன்  வகுப்புக்கு வரும்போது  கொண்டு வரணும் , முடிஞ்சதும் கொண்டுபோய்  ஸ்டாப் ரூமில் எனதிடத்தில்  வச்சிறணும். எவனாவது  இதை ஓடிச்சாலோ ,ஒளிச்சாலோ   அவன்  ஒழிஞ்சான். “                   எல்லாரும்  நடுங்கிப் போனோம்.அவரோட  பிரம்பை  யாரும் எடுத்த வர மனசில்லை. அவராக  எடுத்துட்டு வரச் சொல்லவும் ,தேவதாஸ்  தான் போனான். அவன்  கையில் ஆட்சிக்கோல்  இருப்பதுபோல் பீற்றிக் கொள்வான்

பயத்தோடே  படிச்சோம். பயத்தோடு  வீட்டுப் பாடம்  எழுதிப் போவோம். எழுதாம  வந்தவனை  வலக்கையை  நீட்டச் செய்வார். உள்ளங்கையிலும் அடிவிழும், புறங் கையிலும்  அடிவிழும். இடக்கையை நீட்டினால்  “அபிஸ்டு  இந்தக் கையில்  தான் சாப்பிடுவாயா  “ என்றபடி  இடக்கையிலும் வலக்கையிலும்  அடிவிழும். ரத்தத்தால் கோடு போட்டது போல் தடிப்பு காந்தும். ஒருத்தன்  அடிவாங்கும் போது  மற்ற இருபத்தொன்பது பேரும் மனசுக்குள்  கதறுவார்கள். அவர்  லீவு  எடுக்கிற நாள்  இந்த வகுப்புக்கே தீபாவளி  மாதிரி  மகிழ்ச்சி மத்தாப்புகள் பூக்கும்.!

ஒரு நாள் , லத்தி தேவதாஸ்  வீட்டுப்பாடம்  எழுதின நோட்டை வீட்டில்  வச்சிட்டு  வந்திட்டேன்  என்றான்.  என்டா படவா ,  வீட்டுப்பாடம்  எழுதாம இருந்திட்டு  நோட்டை வச்சிட்டு வந்திட்டேன்னு  பொய்யா சொல்றே , போய்  எடுத்துண்டு வாடா  என்கவும் , தேவதாஸ்  திருதிருன்னு  விழித்தான். “எழுதாம ,படுவா பொய்யா சொல்றே “ என்று  அவனை  கையை நீட்டச் சொல்ல  அவன்  இடது கையை நீட்டி விட்டான். இடது கையிலும் அடி ,வலது கையிலும் அடி தாங்காமல் கையை  பின்னால்  இழுத்தான் . வலது  தொடையிலும் முழங்காலிலும்   பட்ட அடி தீயாக எரிந்தது. அலறினான். இதைப் பார்த்த  சில மாணவர்கள்  சிரித்து விட்டனர்.

அவருக்கு  கண்களில் கோபம்  கொப்பளிக்க  , “எவன்டா  சிரிச்சது ,? எந்திரிடா. “ யாரும் எழுந்திருக்கவில்லை.

“ எவனும்  சொல்லலைன்னா , வகுப்பில இருக்கிற  எல்லாத்துக்கும்  அடிவிழும் “  எந்த மாணவரும்  எழுந்திருக்க வில்லை. அவருக்கு  கோபத்தில்  உச்சந்தலை  அதிர  முகத்தைக் கோணலாக வைத்துக் கொண்டு காவிக்கரை படிந்த பற்கள் நற நறக்க  அந்த பிரம்பால்  மேஜையில்  அடித்தார். சாக்பீஸ் துகள்கள்  வெண்மேகமாய் பறந்தது. பயத்தைக்  கிளறியது.

நான்  மெல்ல  எழுந்து  சொன்னேன் .” சார்,  கோபிச்சுகாதீங்க. யாரு  சிரிச்சாங்கன்னு   தெரியாது. ஆனா  ஏன்  சிரிச்சாங்கன்னு  தெரியும்  சார்.”  அவர்  , சொல்லு  என்பதைப் போல் தலையை மேல்நோக்கி  அசைத்தார்.

“இந்த  தேவதாசோட  அப்பா   போலீஸ் ஏட்டு .  தேவதாஸ்  கேட்கிற  தின்பண்டத்தை  நாங்க குடுக்கலைன்னாலும்,  விளையாட்டில்  அவனை  சேத்துக்கலைன்னாலும்  தன்  அப்பாவிடம்  சொல்லி லத்தியடி வாங்கித்  தந்திருவேன்னு   மிரட்டுவான்  சார் . உங்க பிரம்பை அனுதினமும் அவன் எடுத்திட்டு வர்றதினால  நீங்க  அவனை  அடிக்க மாட்டீங்கன்னு  பெருமை பேசினான் சார். இப்போ  அவனே  சக்கையா அடி வாங்கிறான் இல்ல.  அதுக்காகத்தான்  பசங்க  சிரிச்சாங்க   சார். “ நான்   சொன்னதைக்  கேட்ட  தேவதாஸ்  தேம்பித் தேம்பி   அழுதான்.

வாத்தியார்  அவனைப் பார்த்ததும்  தேவதாஸ்  தலையைக்   குனிந்து  கண்களைத் துடைத்துக்  கொண்டான். அவர்  தலையை இடப்பக்கமாக அசைத்தார். அவன்  முகத்தை சட்டை நுனியில்    துடைக்கிற பாவனையில்   வகுப்பின்  இருபக்கமும்  இருக்கிற  பையன்களை  ஒரு கழுகு பார்வையில் நோட்டமிட்டபடி   அவனிடத்துக்குப் போனான்.. பையன்கள்  சிரிப்பை மறந்து இப்படியொரு  அடி யாரும்  வாங்கக் கூடாது என்று  இரக்கம்  சுரந்திருந்தனர் .  அவன்  டெஸ்கில் தலையை வைத்து  முகத்தை மூடிக் கொண்டான்.                               வாத்தியார் பிரம்பை  மேஜை மீது போட்டார் . சாக்பீஸ் துகள்கள் வெள்ளைக் கொடியை ஆட்டுவது போல்  பறந்தன .அவர் ஐந்து நிமிஷம் கண்களை மூடி உட்கார்ந்திருந்தார். பின்  அவர்  எழுந்து  போர்டில்  எழுதியதை அழித்தார்.  குடுமி அவிழ்ந்து  தொங்கியது. அவர்  ஆங்கில புத்தகத்தை விரித்தார். நாலாவது பீரியட்  முடிந்ததற்கான   மணி அடித்தது. ரகோத்தமன்  சார்  மௌனமாக வெளியேறினார். அந்த பிரம்பை எடுத்துக்  கொண்டு  யாரும்  அவர் பின்  செல்லவில்லை.

நானும்  நண்பர்களும்  தேவதாசுக்கு  ஆறுதல்  சொல்ல நெருங்கினோம்.  “ எந்த  மயிரானும்  கிட்ட வராதீங்க,  அப்புறம்  எனக்கு கெட்ட கோபம்  வந்துரும்  “ என்று  தேவதாஸ்  கொதித்தான். அவன்  சுவர் பக்கம் திரும்பி  தனியாக  உட்கார்ந்து  சாப்பிட்டான். அவன்  முன்னால்  சிரித்துப் பேசியபடி சாப்பிட்டால்  அவன்  மேலும்  கோபப்படுவான்  என்று  மரத்தடிக்குப் போய்ச்  சாப்பிட்டோம்.  அன்று  மதிய வகுப்புகள்  ரகோத்தமன் சாருக்கு  இல்லை.

மறுநாள்  வகுப்புக்கு  ரகோத்தமன் சார்  வரவில்லை. லீவ்  என்றார்கள். அதற்கடுத்த  நாள்களும்  அவர் வரவில்லை. வெவ்வேறு  வாத்தியார்கள்  வந்தனர். எங்களுக்கு   மகிழ்ச்சியாக  இருந்தது. ஆனால்  கால்பரீட்சை  நெருங்குவதால்  கவலையாகவும்  இருந்தது. தேவதாஸ்  சொல்லி அவனப்பா  மிரட்டியதால் தான்  ரகோத்தமன் சார்  லீவில போயி                விட்டாருன்னு  அவன்  சொல்லித் திரிந்தான். நான்  பியூன் கந்தசாமி  வீட்டில்   ரகோத்தமன்  சார் பற்றி  விசாரித்தேன். அவர்  அன்றைக்கு வகுப்பில்  என்ன நடந்தது  என்று  விசாரித்தார். சொன்னேன்.

 கந்தசாமி என்ன நடந்ததென்று சொன்னார் ; “ அன்று  மதிய உணவ சாப்பிடும் போது ,ரகோத்தமன்  சார்  தேவதாஸின்  அப்பா  பற்றி  விசாரித்திருக்கிறார். அவுங்கப்பா  ஏட்டு செல்லமுத்து , இந்தி எதிர்ப்பு போராட்ட  சமயத்தில  போராட்டக்கார்களை  லத்தி கொண்டு  அடிச்சதில  நிறைய பேருக்கு  மண்டை  உடைந்து ரத்தம் கொட்டியது பலருக்கு  கைகால் எலும்புகள்  முறிந்தன. போராட்டக்காரர்கள்  அவரைச் சூழ்ந்து கொண்டனர் . மலபார் போலிஸ் பட்டாளம்  தலையிட்டு  அவரை மீட்டது. அவரது  போட்டோ போட்டு  எல்லா நியுஸ் பேப்பர்களிலும்  வந்து பெரிய அளவில் பேசப்பட்டது  சாதாரண போலிசாக இருந்தவருக்கு  அரசாங்கம் ஏட்டு  பதவி உயர்வு  கொடுத்தது. இந்தத்  தொகுதி எம்பி ,எம் எல் எ  எல்லாம் அவரு  சாதிக்காரங்க  என்று  அவரது  பின்னணியைச்  சொல்லக் கேட்டதும்   ரகோத்தமன்  சாருக்கு  ரத்தக்கொதிப்பு  அதிகமாகி  மயக்கம் போட்டுட்டார். அப்புறம்  பெரியாஸ்பத்திரியில்  சேர்த்திருக்கு. அதனாலதான் அவரு  வரலை. அவரு  இனி இந்த ஸ்கூலுக்கு வரமாட்டார். திருச்சிக்கு  வேலை மாத்தி வாங்கிட்டுப் போயிருவாருன்னு  பேசிக்கிறாங்க. “ இந்த விஷயத்தை  நான்  யாருக்கிட்டவும்  சொல்லலை.

.எச்.எம்  சார்  இங்க்லீஷ் பாடம்  எடுத்தார். அப்துல் சுபான் வாத்தியார்  சரித்திரம் நடத்தினார். படிப்பு பற்றி கவலை இல்லை.தேவதாஸ்  சண்டியர் மாதிரி  மிரட்டலாகத்  திரிந்தான். எங்களுக்கு  வர்ற வாத்தியாருக  அடிப்பவர்கள்  யாருமில்லை .மிரட்டுவார்கள். பெஞ்சு மேல ஏறி நிற்கச் செய்வாங்க. இம்போசிசன் ஐம்பது, ,நூறு தடவைன்னு  எழுதச் செய்வாங்க. மிஞ்சிப் போனால்  அப்பா, அம்மாவை  அழைத்து வரச் சொல்லுவர்கள். ஒரு நாள்  வீட்டுப்பாடம்  தேவதாஸ்  எழுதிவரலைன்னு  எச் எம் சார்  அவனது  அப்பாவை  அழைத்து வந்தால் தான்  ஸ்கூலுக்குள்ளே  நுழைய முடியும். ரெண்டு நாளில்  அப்பாவை அழைத்து வரலைன்னா  டிசி கொடுத்து  அனுப்பிருவேன். அப்புறம் இந்த வருஷம் எங்கேயும்  சேர்ந்து படிக்க முடியாது  என்று கண்டிப்பாகக் கூறிவிட்டார்.

தேவதாஸ்  போய்  அழுகவும்  அவனது அப்பா வந்து விட்டார். ஏட்டு செல்லமுத்து  வர்றதைப் பார்த்ததும் ஒரு  லத்தி காக்கி சீருடையும் கத்தி மாதிரி விறைத்த  காக்கி  ட்ரவுசரும் ,வட்டக்கூம்பு தொப்பியும்  அணிந்து  வந்தது போலிருந்தது . ஆபிசே  அதிர்ந்து உறைந்து நின்றது. ஏட்டு   நுழைந்ததும் எச் எம்க்கு  சல்யூட்  அடித்தார். கொஞ்சம் இருங்க ,இந்த பைலை  முடிச்சிட்டு வந்திர்றேன்  என்றார்  தலைமை ஆசிரியர்.                                                 ஏட்டு  செல்லமுத்துக்கு  முகம்  சிவந்து போனது. பல்லை கடித்து    உதட்டை இறுக  மூடிக்கொண்டு  தலைமை ஆசிரியர் அலுவலகச்  சுவற்றில்  பதிக்கப்பட்ட  பள்ளி வரலாறு, வாங்கிய கேடயங்கள் , பள்ளிக்கு வந்த முக்கிய பிரமுகர்கள் படங்கள்,அவர்களிடம்  விருது பெற்ற மாணவர்களது போட்டோக்கள்   எல்லாம்  பார்த்தார். பெருமூச்சு விட்டார். முப்பது  நிமிடங்கள்  ஊர்ந்திருந்தது.                                                     அரசுச் சின்னம் பொறித்த  சிகப்பு, நீலநிறப் பட்டைகள் பொதிந்த வட்டத்தில் கூம்பு போன்ற வடிவத்  தொப்பியை கையில் எடுத்துக் கொண்டு , “சார், எம்மகன்  என்ன தப்பு செய்தாலும்  கண்ணு, காது, மூக்கை விட்டுட்டு அடிச்சு தோல் உரிச்சிருங்க சார். நான் ஏன்னு  கேட்க மாட்டேன், அவனை  எப்படியாவது படிக்க வச்சிருங்க சார்” என்று  ஏட்டு  செல்லமுத்து  சொல்லும்போது  அவரது முகமெல்லாம்  வியர்வை  அருவியாய் உருண்டது  .வேர்வை கோர்த்த மீசை நமநமத்தது. காக்கிச்சட்டை பின்புறம்  நனைந்து இருந்தது.

“ சார், நாங்க  எங்க மாணவர்களை  அடிக்கிறதில்லைன்னு  முடிவு         எடுத்திருக்கோம் . அடிக்கிறதினால  ஒருத்தரை  திருத்தியிறலாம் என்கிறதில  நம்பிக்கை இல்லை. உங்க பைய்யன்  ஒழுங்கா பள்ளிக்கு வந்து அக்கறையா  படிக்கிறதுக்கு  பெற்றோர்கள் கவனிப்பும்  ஒத்துழைப்பும் இருந்தால்  போதும் .”

  கருப்பு  வைரமாக  பளபளக்கும் பூட்சுக்குள் சிறைப்பட்டிருந்த  ஏட்டு  செல்லமுத்துவின்  விறைப்பான   கால்கள் வேர்த்து  தளர்ந்து  அதிர்ந்தன அவரது  லத்தியை  யாரோ பிடுங்குவது  போல் உணர்வு.