இளம்அதிகாரியின்நாள்
குறிப்பு(ஜனநேசன்)
நகரில்ஒர் அடர்ந்தவனம்
போலமாவட்டஆட்சியரின்முகாம் அலுவலகம் அமைந்திருந்தது.இருள்மேனியில்ஒளிக்கொப்பளங்கள்
போல் மின்விளக்குகள் மங்கியஒளியை உமிழ்ந்துகொண்டிருந்தன. சற்று தொலைவிலுள்ள தெருக்களில்
வீடுகள் மூடியிருந்தாலும்
வீடுகளிலிருந்து வெவ்வேறு அலைவரிசைகளின் ஒலிஓவியங்கள் கதவிடுக்குகளில் கசிந்துகொண்டிருந்தன.
கேட்கும்நாய்கள் கொட்டாவி விட்டு வாசல்களில்முடங்கிகிடந்தன!இந்தநிகழ்வுகளின்தடயங்கள் ஏதுமின்றி முகாம்அலுவலகம் இரவின் விரிப்பில்
உடலைக் கிடத்திஇருந்தது.மரங்களில் தலைகீழ் தொங்கும் வௌவால்கள்
கூகைகளின் குளறலால் விழிப்புற்று பெருமூச்சுவிட்டன. இவர் மட்டும்
விழித்திருந்தார் .இவர் மாவட்ட ஆட்சியராக பணியேற்ற முதல்நாள்
நாள்குறிப்பு எழுத அமர்ந்தார். காலையில் ஆறரை மணிக்கு வந்துசேர வேண்டிய தொடர்வண்டி எட்டுமணிக்குத்தான் வந்தது. அதனால் முதல்நாளே நெருக்கடியில் தொடங்கியது. இவர் வழக்கம்
போல் எழுதுவது போல ரத்தினச் சுருக்கமாக நாள்குறிப்பை எழுதுவதா ,நிகழ்வுகளை எதிர்கொண்டதுபோல் விரிவாக எழுதுவதா என்று கேள்வி எழுந்தது .நிகழ்வுகள் வரிந்துகட்டிநிரலாக
நின்றன!
புதிய மாவட்ட மக்களுக்கு தன் முகம் பத்திரிகைகள்
மூலம் அறிமுகமாகும் முன்னே நேரில்சென்று மக்களை அறியும் ஆவல்.ஆகவேமக்கள்நிலை அறிய முடிதிருத்தும் நிலையம் சென்றால் முடியும் திருத்திடலாம்; மக்கள் நிலையை ,இயல்பையும் ஓரளவு அறிந்திடலாம் என்ற
எண்ணத்தை ரயில்தாமதம் தடம் புரட்டிவிட்டது. ஒன்பது மணிக்கு மேலே
முடிதிருத்தும் நிலையம் சென்று திரும்பி குளித்து அலுவலகத்தில் பணிசேர பதினொரு மணியாகிடும்
! இல்லத்திற்கே முடிதிருத்துநரை வரச்சொன்னார். முடிதிருத்துநர்
வந்ததும் காவல்துறையினர் மாதிரி நேர்நின்று வலக்கையை உயர்த்தி நெஞ்சை விடைத்து முகத்தை
நிமிர்த்தி மரியாதை வணக்கம் செய்தார். !இவருக்கு அதிர்ச்சியாக இருந்தது. அவரை விசாரித்ததில் அவர் ஹோம்கார்டு
காவலராக இருக்கிறாராம் அவர்தான் மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கும், மாவட்ட ஆட்சியருக்கும் முடிதிருத்துவாராம் !இவருக்கு கோபம்வந்தது. அடக்கிக் கொண்டு
வெளிக் காட்டாமல் அவரிடம் விசாரித்தார் .பரம்பரையாக செய்து வந்த
முடிதிருத்தும் தொழிலிலிருந்து தப்பித்து தானே ஊர்க்காவல் படையில்சேர்ந்தீர்கள்,?”
“ஆமாம் அய்யா, ஆனால் எஸ்பி சொல்லும் போது நான்
செய்து தானே தீர வேண்டும்!எந்த வேலை பார்த்தா என்ன? உனக்கு அரசு சம்பளம் தானே என்று கட்டாயப் படுத்தினார் .பெரிய அதிகாரி உத்தரவை மீறமுடியுமா? அய்யா
கடந்த அஞ்சு வருஷம் முன்னால
இருந்த எஸ்பி இந்த டூட்டிக்கு அனுப்பி ,
அப்போதிருந்த கலெக்டருக்கும் முடிதிருத்தவ
ச்சிட்டா ங்க. மறுக்க முடியாமல் முடிவெட்டிசவரம் பண்ணிக்கிட்டு
இருக்கேன். நீங்க ஒருத்தரு
தான் ஏன்னு கேட்டிருக்கீங்க!” என்று குரல் தழுதழுக்கச் சொல்லி குனிந்து கைகட்டி நின்றார் .இவர் சொன்னார், ”இனிமேல் நீங்க
ஹோம்கார்டுக்கு உள்ள வேலையைத் தவிர இந்த மாதிரி வேலைகளைப் பார்க்கக் கூடாது!
நான் எஸ்பிகிட்டபேசிக்கிறேன்;பயப்படாமல்போங்க!”
என்றதும்அவர் கண்ணீர் பொங்க கும்பிட்டு சென்றார். அவரது நடையில் ஒரு நிமிர்வும் கம்பீரமும் மிளிர்ந்தது!
மணி பத்தை நெருங்கிக் கொண்டிருந்தது. இவர் சுயசவரம் செய்ய குளியலறைக்கு
சென்று முகத்தில் சோப்பு நுரையைத் தேய்த்தார். இவருக்கு
ஒன்பதாம் வகுப்பில் மிலிட்டரி வெள்ளைச்சாமி சார் சொன்ன சம்பவம் நினைவில் குமிழ்ந்தது!
ஒருநாள் இவன் தனியாக இருக்கும்
அவரிடம் போய் ,“மத்த சார்கள் மாதிரி இல்லாம நீங்கமட்டும் எப்படி
சார் கணக்கு இங்கிலீஷ், சயன்ஸ்ன்னு எல்லா பாடங்களையும் ரொம்ப எளிமையாக புரியற மாதிரி உதாரணத்தோட
சொல்லித்தர முடியுது” என்று கேட்டான்.
வெள்ளைச்சாமி சார் சொன்னார்; ”தம்பி, எனக்கு சின்ன வயசிலேயே படிப்பு மேல் ஆர்வம் அதிகம்!ஆனா எட்டாம் வகுப்பு படிச்சிக்கிட்டு இருக்கும் போது எங்கப்பா இறந்தவுடனே எங்க
கிராமத்துக்காரங்க எங்கப்பா பார்த்த சவரத்தொழிலைத் தான் நான் பார்க்கணும்னு கட்டாயப்படுத்தினாங்க.
எங்கம்மாவும் தாய்மாமாவும் ஊருக்காரங்க பேச்சைக்
கேட்கலைன்னா ஊரைவிட்டுப் போகணுமேன்னு அழுதாங்க.மதுரையில மிலிட்டரிக்கு ஆள்
எடுக்கிறாங்கன்னு பேப்பர்ல செய்தி வந்ததைப் பார்த்துட்டு எங்கஊர்ல இருந்து மதுரைக்கு
ராத்திரியோட ராத்திரியா முப்பது மைல் நடந்தே வந்து சேர்ந்து அங்கிருந்த மிலிட்டரி ஆபிஸர்கிட்டே
சொல்லி அழுதேன் .அவரு என் உடல்வாகையும் உசரத்தையும் பார்த்து
சாப்பிடச் சொல்லி ,அவர் மிலிட்டரியில் தரைப்படைக்கு சேர்த்து
பஞ்சாப்புக்கு கூட்டிகிட்டு போயிட்டார்! சாப்பாடும் சம்பளத்தோடு
டிரெயினிங்கும் கொடுத்தாங்க! டிரெயினிங் முடிஞ்சதும் பங்களாதேஷ்
யுத்தத்திற்கு அனுப்பினாங்க! போர் சீக்கிரமே முடிஞ்சதும் என்னை காஷ்மீர் படைப்பிரிவுக்கு மாற்றினார்கள்! அங்கே போர் இல்லாத நிலையில் என்னை மற்ற படைவீரர்களுக்கு சவரம் செய்யும்
பணியில் அமர்த்தினார்கள். எங்கள் படைப்பிரிவு மேஜரிடம்சொன்னேன்
.அவர் இந்த நடைமுறை பிரிட்டீஷ் காலத்திலிருந்து இருக்கிறது!அப்போதெல்லாம் ‘கால்மீதோட்டி, பே
மீ பாஃர்ட்டி ‘ என்று சிப்பாய்கள் சொல்லி, கொடுத்த எந்த வேலையையும் செய்தார்கள்! எந்த வேலை பார்த்தால் என்ன உனக்கு சர்க்காரு சம்பளம்
தானே? மேலும் இந்த வேலை செய்கிறவங்களுக்கு
மிக நெருக்கடியான போர்க் காலம் தவிர மற்ற நேரங்களில் போர்க் களத்திற்கு கூட
போகத் தேவை இருக்காதுஎன்றார்.இந்தவேலை பார்க்கிறதுக்கு நான் வீரமாக
போர்க் களத்திலே போய் சாகக் கூடத் தயார் என்றேன்!எனது கிராமத்திலிருந்து சுயமரியாதைக்காகத்
தப்பி வந்த வாழ்க்கை சூழலை உருக்கமாகச் சொன்னேன்.. .அவர் தற்காலிகமாக
என்னை வேறு படைப்பிரிவுக்கு மாற்றி மேலும்
தபால்மூலம் என்னை படிக்கச் சொன்னார். திறந்த நிலைகல்வியில் பட்டப்படிப்பு
ராணுவஆதரவில்படித்தால் ஆபிசராகலாம் என்றார்! நான் வைராக்கியத்தோடு
படித்து பிஎஸ்சி முடித்தேன்.ஆபிசர்ஆனேன்! பிஎட் முடித்து அங்கேயே இரண்டு வருஷம் ராணுவப் பள்ளியில் வாத்தியாராக இருந்தேன்
! நாற்பது வயதில் ஓய்வு வாங்கி தமிழ்நாடு அரசு மூலமாக இந்த ஹைஸ்கூல்
வாத்தியாரானேன்! நான் எப்படி புரிந்து வைராக்கியத்தோடு படித்தேனோ அதேமாதிரி சொல்லிக்
கொடுக்கிறேன் .சுயமரியாதையும் தன்னம்பிக்கையும் ஆர்வமும் உழைக்கும்
வைராக்கியமும் தான் முன்னேற்றத்துக்கு முக்கியமான
தேவை ”என்று சொன்னார். வெள்ளைச்சாமி
சாரை முன்னுதாரணமாக நினைத்து சாதாரண கூலித் தொழிலாளியின் மகனான இவர் இன்று இந்திய ஆட்சிப் பணியில் தேர்ச்சி அடைந்து
மாவட்ட ஆட்சியராக உயர்ந்திருக்கிறார் ! சுயசவரம்முடித்துஇவர்கண்ணாடியைப்
பார்த்தார்.பளிச்சிட்டஇவரதுமுகத்தின் பின்னால்வெள்ளைச்சாமிஒளிர்ந்தார்!
இவர்பணியேற்றஅன்றேதலைமைச்செயலருக்கும்,மாநிலமனிதஉரிமைஆணையருக்கும்கடிதம்எழுதிசாதிக்குலத்தொழிலைபணியாளர்கள்செய்யநிர்ப்பந்தப்படுத்துவதைதடுக்கஆவனசெய்யவேண்டினார்!
இவர்பணியேற்றபின், பணியாளர்கள்வரவேற்பும்அறிமுகமும்,பத்திரிகையாளர்கள்மின்னூடகவியலாளர்கள்சந்திப்பும்முடிந்ததும்அன்றாடப்பணிகளில்கவனம்செலுத்தியபோதுநகரப்பிரமுகர்கள்சந்திப்புக்குநேரம்கேட்டுத்தகவல்கள்வந்தபடிஇருந்தன.மிகமுக்கியவேலைகளைமுடித்தபின்மதியஉணவுஇடைவேளையில்ஒவ்வொருத்தராகசந்திக்கஅனுமதித்தார்.
வி.என் .பாதக்என்றதொழிலதிபர்கீதோபதேசம்உருவம்பதித்தபரிசுபொருளின்கீழ்‘கடமையைசெய்பலனைஎதிர்பாராதே’என்றுஎழுதியுள்ளதைத்தந்தார்.இவர்மறுத்து,தான்பரிசோ,பணமோபெறுவதில்லை.ஆகவேநீங்களேஅன்புகூர்ந்துஎடுத்துச்சென்று விடுங்கள்என்றார். அவர்நீங்கள்பயிற்சிகலெக்டராகஇருக்கும்போதுயாரிடமும்எதுவும்வாங்காதநேர்மையானஅதிகாரிஎன்றுகேள்விப்பட்டேன்
. அதனால்தான்காசியைசொந்தஊராகக்கொண்டசாஸ்திரியகுடும்பத்தைசேர்ந்தநான்உங்களைவாழ்த்தும்
விதமாக பலனைஎதர்பாராதுபணியை செய்பவர்என்பதால்இந்தகர்மயோகசிற்பத்தைதந்தேன்என்றார்.
இவர்கடகடவென்றுசிரித்தார்!அவருக்குஇலேசானஅச்சம்முகத்தில்நிழலாடியது ! இவரேதொடர்ந்தார்;எனக்குகர்மயோகம்,’ஊருக்குஉழைத்தல்யோகம்‘என்பதுதான்!அரசின்சம்பளத்தைஎதிர்பார்த்தேமக்களுக்குசேவைசெய்கிறோம்!அரசின் சம்பளம் தவிர லஞ்சம்வாங்காமாட் டோம்!உங்களைமாதிரிபெரிய மனிதர்கள்
தொந்தரவுஇல்லாதஒத்துழைப்புஇருந்தால் போதும்எங்களதுகர்மயோகம்சிறப்பாகஇருக்கும்!
வாழ்த்துக்கு நன்றி!இதைஎடுத்துட்டு தயவுசெய்துபோங்கஎன்றுபுன்னகையுடன்சொன்னார்!அவர்எழுந்துசெல்வதேமரியாதைஎன்றுதயக்கமும்ஏமாற்றமும்அழுத்தஎழுந்தவர்அப்படியேபுன்னகையைவரவழைத்துக்கொண்டுஉட்கார்ந்தார்; மன்னிக்கவும்,நேற்று திருப்பதிபோயிருந்தேன்.பிரசாதலட்டு கொண்டுவந்தேன்,கொடுக்கமறந்துவிட்டேன்.இந்தாங்கஎன்றுஎழுந்துநின்றுகொடுத்தார்.இவர் ,நான்இனிப்புஅளவாகத்தான்சாப்பிடுவேன்.பெரியமனிதர்கொடுக்கிறீங்கபிரசாதமாய்கொஞ்சம்எடுத்துக்கிறேன்என்றுசிறுவில்லளை
பிட்டுமீதியைநீங்களேசாப்பிடுங்க!என்றுதிருப்பிக்கொடுத்தார்.வி.என்.பாதக்வாங்கினார்.நான்சாப்பிடுவதில்லை.தனக்குசர்க்கரைநோய்என்றார்.இவரும்தின்னாமல் ,சரி,நன்றி.எனக்குஒரு முக்கியவேலைஇருக்கிறதுஎன்றார்புன்னகையோடு.அவர்வேறுவழியின்றிஎழுந்துநடந்தார்!இவர்மனதுக்குள்சிரித்துசட்டைக்காலரைபின்தள்ளிவேலையில்மூழ்கினார்.
மாலைஐந்தரைமணிவாக்கில்மத்தியவருவாய்த்துறை
அலுவலரானஇவரதுநண்பர்வந்தார்.இவரும்நண்பரும்ஒன்றாகஆயத்தப்பயிற்சிபெற்றுதான்குடிமைப்பணிதேர்வெழுதினர்.இவருக்குஆட்சிப்பணிகிட்டியது.நண்பருக்குவருவாய்அலுவலர்பணிதான் கிடைத்து.இருவருக்கும்ஆந்திரமாநிலமேகிடைத்ததுஎதிர்பாராதஉடனிகழ்வு!இவர்துணை ஆட்சியர்பணிபயிற்சிமுடித்துவணிகமுக்கியத்துவமிக்கஇந்தமாவட்டஆட்சியராகபொறுப்பேற்றார்.
.நண்பர்இவருக்குமுன்பேஇங்கேசுங்கவரிஅலுவலராகப்பொறுப்பேற்றிருந்தார்.தற்போதுஇவர்இங்கேபொறுப்பேற்றதற்குவாழ்த்திசிறுவிருந்துக்குஅழைத்துச்செல்லவந்தார்.நண்பர்வரப்போவதறிந்துஇன்றைக்கானஅவசரப்பணிகளைமுடித்துமிகுந்தஅவசரமிக்கமுக்கியக்கோப்புகள்வந்தால்முகாம்அலுவலகத்திற்குஅனுப்பதனியலுவலரிடம்சொல்லிநண்பரோடுவெளியேபுறப்பட்டார்.
நகரில்பிரபலஉணவகத்தில்குளிர்வூட்டப்பட்டஅறை.சுவரில்ஒருபுறம்கண்குளிர்விக்கும்பச்சைபசேல்மலைகளும்
சோலைகளும், இன்னொன்றில்ஆர்ப்பரித்து
பொங்கிவழியும்அருவிகளும்சுவர்த்தாளில் கச்சிதமாய்ஒட்டப்பட்டிருந்தன!உணவகத்தில்நுழைந்தவுடன் எல்லாரதுகண்களிலும் படும்படியாகஒரு செவ்வக
கண்ணாடித்தொட்டியில்வண்ண வண்ண மீன்கள் நீர்க்குமிழ்களிட்டுவலம்வந்துகொண்டிருந்தன!இவைஎல்லாம்பார்த்தநொடியில்ஈர்ப்பைஉணர்த்துபவை!ஆனால்இவர்மனதில்‘கம்மாய்குளங்களை தூர்த்துகட்டடங்களாக்கிவிட்டு மழைநீர் சேகரிப்பு தொட்டிகட்டச்செய்யும்தற்காலநடைமுறைகள்'தோன்றிவிசனச்சிரிப்பைகுமிழ்வித்தது!இதையாரிடம்சொல்லிசிரிக்க முடியும்?,அழமுடியும்?'இருவரும்நேருக்குநேர்முகம்பார்க்கும்படிஅமர்ந்தனர்.பரிமாறுநன்பலவண்ணத்தில்அச்சிட்டபடங்களுடன்கூடியஉணவுவகைபட்டியலைபவ்வியமாகவைத்துநோக்கினான்.இவர்கள்இருவரும்பட்டியலைப்பாராமலேவேண்டியைகளைகொண்டுவரச்சொல்லிவிட்டு,பயிலும்காலம்தொட்டுபணிப்பயிற்சியின்போதுஇருந்தசகாக்களைப்பற்றியும், தற்போதுஅவர்கள்பணியாற்றும்முறைமைகுறித்தும்அளவலாவினார்கள்.பேச்சுஇன்றையநடப்புகள்குறித்துபடர்ந்தது.நண்பர்தான்கேட்டார்,”வி.என்.பாதக்என்றபிரமுகர்பரிசுப்பொருள்
கொடுத்துஅன்பாகமிரட்டிஇருப்பாரே?”
“ஆமாம்வந்தார்.பரிசுகொடுத்துவாயைக்கிளறிபார்த்தார்.குளிர்ச்சியாய்பதில்சொல்லிஅவருக்கு சூட்டைகிளப்பிவிட்டுட்டேன்!வாயைமூடிகிட்டுபரிசோடுதிரும்பினார்”என்றார்இவர்.
நண்பர்கெக்கலியிட்டுசிரித்தபடி,”அந்தவி.என்.பாதக்ஒருமாதிரியானஆள்,மிஞ்சுனாகெஞ்சுவார்;கெஞ்சுனாமிஞ்சுவார்;சிக்கலானனஅவர்கிட்டெகவனமாஇருக்கணும்!எல்லாஅரசியல்
கட்சிகளின்உயர்மட்டத்தலைவரகளோடுதொடர்புவைத்துக்கொண்டுநேரத்திற்குதகுந்த
மாதிரிமாறிக்குவார்;தேவைக்கேற்றபடி அவர்களைபயன்படுத்திக்கொள்ளுவார்.அவர்காசியிலுள்ளசாஸ்திரீயகுடும்பத்தைசேர்ந்தவர்என்பார்ஆனால்இந்தமாவட்டத்தில்பலகிரானைட்குவாரிகள்
,டிரைக்கிளீனிங்சென்டர்கள்,ப்யூட்டிபார்லர்கள்இப்படிநிறையவியாபாரங்கள்வெவ்வேறுபெயர்களில்நடத்துகின்றார்.இப்போமாவட்டஆட்சியர்அலுவலகம், மத்தியசுங்கத்துறைஅலுவலகங்களைநத்தி
நச்சரித்துமாட்டிறைச்சிஏற்றுமதிக்குமுயன்றுவருகின்றார்!பணத்தால்எதையும்சாதிக்கநினைக்கும்அவர்பிறருக்குசொல்லும்முக்கியவாசகம்'கடமையைச்செய்!பலனைஎதிர்பார்க்காதே!' என்பது!” என்றுநண்பர்சத்தமாய்சிரித்தார்.இவரும்கலகலவெனசிரித்தார்.பொதுவாகஉயரதிகாரிகள்பொதுவெளியில்சத்தமாகபேசுவதோ,சிரிப்பதோஇல்லை!அதுஅவர்களுக்குபயிற்சியின்போதேஅறிவுறுத்தப்பட்டுள்ளது!ஆனால்அவர்கள்சமஅந்தஸ்துள்ளஅதிகாரிநண்பர்களுடன்தனிஇடத்தில்சந்திக்கும்போதுதான்இப்படிசத்தமாகசிரிக்கவோ,பேசவோஇயலும்!
இவர்நண்பரிடம்
மெல்லகிசுகிசுத்தார்,”அந்தபரிமாறுநன்நம்மையேஉற்று
உற்றுபார்த்துக்கொண்டிருக்கிறான்,கவனிச்சியா”அவர்நானும்கவனித்தேன்.அவன்உன்னையேபார்த்தபடியேஇருக்கிறான்!நாம்கேட்டஉணவுகளைபரிமாறும்போதுஅதீதமானபணிவோடுபரிமாறுகிறான்!சாதாரணஉணவகச்சிப்பந்தியைவிடபவ்வியமாகபுன்னகைக்கிறான்!
அதிகபணிவுஅதீத ஆபத்து!சரி ,வேற்றுமாநிலத்தில்இருக்கிறோம்உசாராஇருப்போம்”என்றுபேசிக்கொண்டேஅவனுணராபடிகவனித்தவாறுதின்றனர்!
சாப்பிட்டுமுடித்ததும்இவர்முதலில்கைகழுவப்போனார்.பரிமாறுநன்இவர்அருகேப்போனான்.மெல்லகாதருகேநகர்ந்து,”சார்நீங்கஒத்தவீட்டுக்காரருமகன்தானே?” என்றுகேட்டான்.இவருக்குதனதுகிராமத்துவீட்டைஅறிந்தபையன்இங்கேயா….என்றுஆச்சரியத்திலிருந்துநீங்குமுன்,அவனே தொடர்ந்தான்,”சார்,நான்நம்மூருசின்னவாடன்மகன்முத்தன்சார்!நான்யாரு ,எந்தசாதின்னுசொல்லீராதிங்கசார்!பிழைப்புபோயிரும்சார்”என்றகையெடுத்துகும்பிட்டான்!இவருக்குஒருகனம்உடலெல்லாம்உருகிமண்ணில்கரைந்ததுபோல்உணர்வு!இவர்தன்னைசமாளித்துக்கொண்டு“உன்னையாரென்றுசொல்லமாட்டேன்!ஆனால் நான்இப்போதுஇந்தமாவட்டகலெக்டர், இதைவிடநல்லவேலைவேணுமுன்னாஎன்னைவீட்டில்வந்துபாரு!”
இதற்குள்நண்பர்பதறியபடிஎன்னாச்சுஎன்றபடிஓடிவந்தார்.இவர்அவனதுதோளில்கை போட்டுதழுவிய படிநின்றிருந்தார்.
No comments:
Post a Comment