காத்திருப்பு - உள்ளடக்கம்
1 . தென்னையைப் பெற்றவள் . 20. தோட்டாவில் பூக்கும்
2 . இளம்
அதிகாரியின் நாள்குறிப்பு. மலர்கள்
3 . காத்திருப்பு .
4 . திசையற்று ..
5 . வேண்டுகை .
6 . பழுது .
7 .கடிவாளமற்று... .
8. அமாவாஸை ..
9 மரணவிரும்பி .
10 புதுப்புது சகுனிகள் .
11 .புது வெளிச்சம் .
12 கடந்து போதல் .
13 .சுவேதா .
14 . பொருத்தம் .
15 . தவிப்பு .
16 . ஜீவகாருண்யம்
17. ஆக வேண்டியதை....
18. பிழிவு
19. உண்டியல்
என்னுரை
காலம் ஒரு சிறந்த சிற்பி . காலநதியின் இடைவிடா ஓட்டம் நடுவே சிக்குண்ட பாறையாக இருந்த என்னுள் படிந்திருந்த முண்டுகள் முரண்பாடுகள் ,வெற்று கோப தாபங்கள் , அகங்காரங்கள் என உறுத்தல் துருத்தல்கள் ,எல்லாவற்றையும் உடைத்து உருட்டி உருட்டிக் கரைத்து பளபளக்கும் படிகமாக வடிவப் படுத்தி உள்ளது. இந்த பரிணாம ஓட்டம் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. இந்தக் காலகதியில் நினைவின் உளிகள் செதுக்கிய உயிர்ச் சிற்பங்கள் இங்கே கதைகளாக பரிணமித்திருக்கின்றன .இவை இந்த சமூகத்தில் இருந்து வடிக்கப் பட்டவை. ஆகவே இக்கதை மனிதர்கள் இந்த சமூகத்தின் மனித பிம்பங்கள். காலக் கண்ணாடியில் வெளிப்படும் இப்பிம்பங்கள் --உங்களோடு உறவாடவும் ஊடாடவும் வந்துள்ளனர் . இவர்களை உங்களிடம் ஒப்படைக்கின்றேன்.
2018 டிசம்பரில் கஜா புயலின் தாக்கத்திலிருந்து 2021 மார்ச் –கொரோனா தொற்று முதல்அலைக்காலம் வரை கொரோனா தீநுண் கிருமி தாக்கம் நம்மைச்சுற்றி உள்ளவர்களை அலைக்கழித்தைக் கண்ட , உற்ற நிகழ்வுகள் கதைகளாக என்னை எழுதத் தூண்டியது. இவையே எனது ஏழாவது தொகுப்புக்கான கதைகள் . மேற்குறித்த காலத்தில் நான் மேற்கொண்ட பயணங்களும் , கள ஆய்வும் கூட கதைகளாகி உள்ளன. சிறுவயதிலிருந்து என்னை உலுக்கிய நிகழ்வுகளையும் இந்தக் காலச்சூழல் என்னை எழுத வைத்தது . அப்படி எழுதிய கதைகளில் காத்திருப்பு என்னும் கதை இலக்கிய சிந்தனையின் அறிந்தேற்பை பெற்றுத் தந்தது. இதுவே இத்தொகுப்பின் தலைப்பு கதையாகவும் மகுடம் சூடுகிறது. இத்தொகுப்பில் உள்ள புதுப்புது சகுனிகள் வெளியான பின் அந்தக் கதைக் கருவான இணையவழி சூதாட்டத்தை தமிழக அரசு தடை செய்தது இந்தப் படைப்புக்கு கிடைத்த சமூக ஏற்பாகும் .
மேற்குறித்த மூன்றாண்டு காலத்தின் பெரும்பகுதி கொரோனா முதல் அலையின் தாக்கத்தில் அச்சு ஊடகங்களும் முடங்கிய காலமாதலால் இத்தொகுப்பின் பெரும்பாலான படைப்புகள் புக்டே .இன்., திண்ணை இணைய வார இதழ், பிரதிலிபி இணைய இதழ் , வாசகசாலை இணைய இதழ்களில் வெளியானவை. இவ்விதழ்களுக்கும், உயிர்எழுத்து , தினமணி கதிர், வண்ணக்கதிர் ,செம்மலர் , புதியஆசிரியன் இதழ் நிருவாகிகளுக்கும் இந்நூலை சிறப்பாக வெளியிட்டுள்ள பதிப்பாளருக்கும், நன்றி தெரிவிக்க நன்றி என்ற சொல்லினும் வேறு சொல் இல்லை. கொரோனாவின் கொடும்மூச்சு எங்கள் மீது படாமல் பாதுகாத்து உறுதுணையாக இருக்கும் எனது குடும்பத்தாருக்கும் எனது படைப்புகளை ஊடகங்கள் வழி வாசித்து கருத்தாடல் செய்த ஆளுமைகள் ,இனி வாசிக்கவிருக்கும் தமிழ்கூறும் நல்லுலகின் வாசக இதயங்களுக்கும் நன்றி கூறக் கடமைப் பட்டுள்ளேன்.
மிக்க
அன்புடன் ஜனநேசன்.
No comments:
Post a Comment