Sunday, 21 August 2022

வேண்டுகை…. {ஜனநேசன்)

 

        வேண்டுகை….                         {ஜனநேசன்)

·          அந்தபேருந்துஇராமேஸ்வரத்திலிருந்துதிருச்சியைநோக்கிப்போய்க்கொண்டிருந்தது. இவர் காரைக்குடி யில் ஏறினார். பின்வரிசைக்கு முந்தின மூன்று சீட்டில் மூன்றாவதுஇடம் இவருக்கு கிடைத்தது  .ஜன்னல் இருக்கை கிடைத்திருந்தால் சாலையை வேடிக்கைப்பார்த்தபடிபயணிக்கலாம்.இந்தஇருக்கையிலிருந்துபேருந்துக்குள் நடப்பதைத்தான் பார்க்க முடியும்.

·          அதுமாலைவேளை.வேலைக்குப்போய்திரும்பியவர்களின்அலுத்து சோர்ந்தமுகங்கள்;பள்ளி ,கல்லூரிக்குச் சென்றுவாடியசெடிகளைப்போன்றஇளம்பெண்கள்எனஉட்காரஇடமில்லாமல்பலர்நின்றிருந்தனர்.இச்சூழல்நெருக்கமும்கிறக்கமும்கவியும்அந்திஇருட்டுக்குஒத்திசைத்தது.இதைஉணர்ந்தோஎன்னவோஓட்டுநர்உள்விளக்குகளைஒளிரவிட்டார்.வாடலுக்குஒளிகூட்டியதுபோலிருந்தது.

·          பேருந்துஒவ்வொருநிறுத்தத்தையும் கடக்ககடக்கநின்றிருந்தோர்பலர் இறங்கவும்சிலர்ஏறவுமாகஇருந்தனர்.மனிதத்திரைகளாக மறைத்து நின்றிருந்தவர்கள்அகன்றுவிட்டனர்இப்போது பேருந்தில்உட்கார்ந்திருந்தோர்அனைவரும் தெரிந்தனர்.

·          இவருக்குமுன்னால்இடப்பக்கஇருவர்இருக்கையில்ஓர்இளம்ஜோடிஅமர்ந்திருந்தது.இருபதுவயதுக்குமேல் மதிக்கக் தக்க இளம்பெண்இருபத்தைந்து வயது மதிக்கதக்க இளைஞரின் மடியில்  படுத்திருந்தாள். அவளது காதருகே அவன் எதோ கிசுகிசுத்தான் .அவள் திடீரென்று  எழுந்து அவனது  முகவாய் கட்டையின் இளந்தாடியை தடவினாள். அவளது பார்வையில்பயமும்ஏக்கமும்கலந்திருந்தது.எதோகிசுகிசுத்தாள்.அவன்அவளைநெஞ்சோடுஅணைத்துஎன்னவோமெல்லபேசினான்.அவனதுகண்ணில்நீர்துளிர்த்தது.அவளதுகன்னத்திலும்நீர்த்தாரைநத்தையின் தடம்போல்மினுமினுத்தது.

·          இவரதுஇருக்கைக்குமுந்தியஇருக்கையில்இருந்தநடுத்தரவயதுபெண்முணுமுணுத்தாள்,”சீ ,கண்ட்ராவிபடுக்கையில் நடக்கவேண்டியதெல்லாம்பஸ்ஸில்நடக்குது.பொதுஇடமுன்னுஇந்தக்கழுதைகளுக்குகூச்சநாச்சமில்லை.எவரும்கேள்விகேப்பாருஇல்லை!”

·          “சின்னஞ்சிறுசுகஇருந்துட்டுப்போகட்டும்!அவுங்களுக்குவீட்டில்என்னென்னபிரச்சினையோ,இங்கனபஸ்ஸில் வந்துஒதுங்கிருக்குக.”என்றாள்இன்னொருநடத்தரவயதுபெண்!

·          ஒருபெரியவர்; “அப்பன்ஆத்தாஎன்னபாடுபட்டுஇவுகளை படிக்கஅனுப்புனாஇதுகளுக்குபோற இடமெல்லாம்படுக்கைகேட்குது.தூத்தெறி.கண்டக்டரே ,இதை கண்டிக்கிறதில்லையா”என்றுபுலம்பினார்.நடத்துனர்வண்டியில்இருக்கும்பயணிகளைஎண்ணிதனதுகணிப்பானோடுஒத்துப்பார்த்து‌க்கொண்டிருந்தார்.கடைசிவரிசைஇளைஞர்ஒருவர் ,”பெரிசு.இந்தபஸ்ஸில்டிவிஇல்லை.அதனாலஇலவசக்காட்சி நடந்துகிட்டு‌இருக்கு.இஸ்டமுன்னாபாரும்.இல்லாட்டிகண்ணைமூடிக்குரும்”என்றுகிண்டலடித்தார்.இன்னொருவயசாளி,”ஏய்யாபஸ்குள்ளாற பாம்புகபுனையல் போட்டதுமாதிரிஇழைஞ்சுகிட்டுஇருக்குக.அவுகளைஇறக்கி விடுமய்யா!”என்றுகத்தினார்.

·          அந்தஜோடிதம்மைச்சுற்றிநடப்பதுஎதையும்கண்டுகொள்ளாமல்உணர்ச்சியில் உருகியும்அணைப்பில்இறுகியும்,சோகப் பெருமூச்சில்முகங்கருகியும்இருந்தனர்.அவர்களின்முகத்தில்பசியின்களைப்புஇருந்தது.கையிலிருந்தபிஸ்கட்டுகளைஒருவருக்கொருவர்ஊட்டிக்கொண்டனர்செல்லைமினுக்கி நேரத்தைஉணர்ந்துஒருவருக்கொருவர்பார்வையால்பலவிஷயங்களைபரிமாறிக்கொள்வதுபோல்தென்பட்டனர்.

·          நடத்துநர்,அந்தப்பெரியவரிடம்வந்து”பெரியவரே ,இதுமாதிரிநித்தம்பத்து பன்னெண்டுஜோடிகளைப்பார்க்கிறோம்.இதைக்கண்டுகிட்டாநாஎப்படி‌டிக்கட்போடறது?அதுவுமில்லாமல்நாஎதுவோசொல்லப்போயி,அவமானப்படுத்திட்டேன்னு பழிபோட்டுட்டுஅதுகஎதாவதுசெஞ்சுகிச்சுதுன்னாஎன்பொழப்புஎன்னஆகிறது?எங்குடும்பபொழைப்புக்குஎன்னவழி?பஸ்ஸில் நடக்கிறதை வேடிக்கைபார்க்கஇஷ்டமில்லைன்னாகண்ணைமூடிகிட்டு வாங்க!”என்றுபொரிந்தார்.

·          பேருந்துபுதுக்கோட்டையில்ஆள்இறக்கம்ஏற்றம்பார்த்துநகர்ந்தது.நடத்துநர்டிக்கட்போடுவதில்மும்முரமாயிருந்தார்.அந்தஇளஞ்ஜோடிஉட்கார்ந்திருந்த இருக்கைக்குமுன்இருக்கைகாலியானது.அந்தஇடத்தில்புதுக்கோட்டையில்ஏறியமுப்பதுவயதுவாலிபன்ஒருவன்வந்தமர்ந்தான்.அவன்பின்னால்சாய்ந்துதூங்குவதுபோலிருந்தான்.அவனதுகாதுகள்மட்டும்விடைத்துஅந்தஇளசுகள்கிசுகிசுப்பதைகவனித்தன.அவர் சிறிதுநேரத்தில்உலுக்கிவிழுந்ததுபோல்விழித்துஅந்தஇளசுகளைநோக்கி“நீங்கரெண்டுபேரும்ஊரைவிட்டுஓடிவருகிறீர்களா”என்றுகேட்டான்.இளைஞன்திகைத்துதயங்கியபடிஅந்தவாலிபனைஉற்று பார்த்தான்.இளைஞனதுஇமைகள்அச்சத்தில் துடித்தன.அவனதுமடியில்படுத்திருந்தபெண்திடுக்கிட்டுஎழுந்துதிகிலோடுஅவனதுகைகளைஇறுகப்பற்றிக்கொண்டாள்.பஸ்ஸிலிருந்தவர்கள்எதோநடக்கப்போகிறதுஎன்றுஅதிர்ச்சியோடுபார்த்தார்கள்.

·          வாலிபன்சற்றுகுரலைமென்மையாக்கி”பயப்படாதீங்க.நானும்உங்களைப்போலஊரைவிட்டுஓடிவந்துஅவஸ்தைபட்டவன்தான்.உங்களுக்குஉதவிசெய்யவேகேட்கிறேன்.நீங்கஎந்தஊரு.எத்தனைமணிக்குபுறப்பட்டவங்க.இரண்டுபேரும் வெவ்வேறுசாதியா? என்றெல்லாம்கேட்டான்.

·          இளைஞன்அந்த‌வாலிபனுக்குமட்டுமேகேட்கும்ஒலியில்'கண்ணைமூடித்திறந்தாசுற்றிலும்சொந்தக்காரங்கவீச்சரிவாள்களோடுநிக்கிறமாதிரிதெரியுது ‘ன்னுபயப்படறாஎன்றுதொடங்கி இரண்டு வாக்கியத்தில் பூர்வகதையைசொன்னான்.

·          “கவலைப்படாதீங்க.துணிஞ்சுகிளம்பிட்டீங்க.இனிபயப்பட்டாகாரியம்ஆகாது.நீங்கபுறப்பட்டநேரத்தைபார்த்தாஅவுங்கஉங்களுக்குமுன்னேபைபாஸில்வந்துதிருச்சிபஸ்ஸ்டாண்டைச்சுற்றிநாலாபக்கமும்தேடிக்கிட்டுஇருப்பாங்க!நீங்கதிருச்சிபோலீஸில்சரண்டாராகும்திட்டத்தைக்கைவிடுங்க!அதுவேஎனக்கானதுமாதிரிஉங்களுக்கும்பாதகமா முடியலாம்.நீங்கரெண்டுபேரும்உயிர்பிழைக்கணுமுன்னாதிருச்சிபஸ்ஸ்டாண்டுக்குபோகாமலேஇந்த அவுட்டர்லவர்ற சென்னை பஸ்ஸைபிடிச்சுதப்பிச்சிடுங்க.சென்னைபோலீஸ்கமிஷனர் கிட்டசரண்டராகிருங்க.நீங்க ரெண்டுபேரும்அடல்ட்ங்கிறதால போலீஸ்உங்களைக்காப்பாத்தவாய்ப்பிருக்கு!” அந்தவாலிபன்சொல்லச் சொல்லஅவர்கள்உதட்டைநாவால்ஈரப்படுத்திக்கொண்டேமலங்கமலங்கவிழித்தார்கள்.இவருக்குமுன்சீட்டில்முனங்கியவயதானபெண்கள்பரிதாபம்தொனிக்க‘உச்' கொட்டினார்கள்.அவள்அவனதுமுகவாய் கட்டையைப் பிடித்துகெஞ்சியதும் , அவன் அவளைஅணைத்துக்கொண்டதும்உயிர்பயத்தினாலதானா என்றுஅங்கலாய்த்தார்கள்.

·          வாலிபன் கேட்டான்,”சென்னைக்குப்போக பணமிருக்கா?“இளைஞன்தனதுபாக்கட்டைத்தடவினான்.வாலிபன்தனதுபர்ஸிலிருந்துஇரண்டுஐநூறுரூபாய்களை தந்தான்.இவர்ஐநூறுரூபாய்தந்தார்.அந்த இருவயதானபெண்கள்ஆளுக்கு‌நூறூருபாய்கொடுத்தனர்.பின்சீட்டில்இருந்துகேலிபேசியபெரியவர்கள்ஆளுக்குநூறு ரூபாய்கொடுத்தனர்.

அந்தவாலிபன்நடத்துநர்மூலமாகஓட்டுநரிடம்சொல்லிதிருச்சியிலிருந்துபுறவழிச்சாலைவழியாகசென்னைசெல்லும்விரைவுபேருந்தைநிறுத்தச் செய்துவாழ்த்துகூறிஇளம்ஜோடிகளைஏற்றிவிட்டனர்.தொலைக்காட்சியில்அடிக்கடிபார்க்கும்காதலர்கள்கொல்லப்படுவதுபோல்இந்தஜோடிகொல்லப்படக்கூடாது.இவர்களுக்குஎந்தக்கெடுதலும்வரக்கூடாதுஎன்றுபெண்கள்வேண்டிக்கொண்டனர்.நிலவைமறைத்தும் விலகியும்நகரும்மேகங்கள்‌போலபயணிகள்மனதில்இந்தஇளம்ஜோடியைக்குறித்தசிந்தனைஅச்சமும்ஆறுதலுமாய்த்தோன்றியது.

·          இந்தபேருந்துபதற்றமில்லாமல்திருச்சிக்குள்சென்றது.

No comments:

Post a Comment