கண்ணுக்கு எட்டியது…
- ஐனநேசன்
சட்டையைப் போட்டுக் கொண்டு வெளியே
கிளம்பும் போது, முத்துநிலவன் வீட்டிற்கு வந்தார், “வாங்க
தோழர். ரெம்ப நாள்
கழிச்சி வந்திருக்கீங்க. இன்னைக்கு மதியான சாப்பாடு நம்
வீட்டில் தான்” என்று
சொன்னபடி அவரை அழைத்துக் கொண்டு வீட்டினுள் நுழைந்தேன். பேச்சு சத்தம் கேட்டு
வெளியே எட்டிப் பார்த்த எனது மனைவி “வாங்கண்ணே மகள், பேரப் பிள்ளைகள் நல்லா இருக்காங்களா” என்று
கேட்டபடி டம்ளரில் தண்ணீர் தந்தார்.
தண்ணீரை வாங்கி ஒரே மிடறில் விழுங்கி விட்டு “எல்லாரும் நல்லா இருக்காங்க. உங்க
உடம்பு தேவலையா” என்று
கேட்டபடி என்னை நோக்கினார். “ஜனநேசன், இன்றைக்கு செய்தித்தாளில் இன்றைய நிகழ்ச்சியில் மேலச்சிவல்புரி கல்லூரியில் மாலையில் ஜெயகாந்தன் பேசுவதாகப் பார்த்தேன். மாலையில் வரமுடியாது. மருத்துவமனைக்கு மல்லிகாவை அழைத்துப்போகனும். அதனால் ஜேகே வைப்
பார்த்து என் புத்தகம் ஒரு பிரிதியை கொடுத்திட்டு பேசிட்டு வரலாம்னு வந்தேன். வாங்க ஒரு எட்டு
போயிட்டு வந்திரலாம்” “நானும்
அவரைப் பார்க்கத்தான் புறப்பட்டேன். நல்ல வேளையாக நீங்க
வந்திட்டீங்க ஜே.கே இங்கதான் அடுத்த தெருவில ஒரு
லாட்ஜ்ல தங்கி இருக்காரு. அவரை கூட்டத்தில பார்க்கிறதைவிட அவரது அறையில் “சபையில்” இருக்கும் போது சந்திப்பது சுவாரசியமானது அவரோடு இயல்பாகவும் பேசமுடியும். வாங்க போகலாம்!”.
வெளியே வானம்
மப்பும் மந்தாரமாக இருந்தது. வெயில் இல்லாவிட்டாலும் ஊமை
வெயிலின் வெக்கை தகித்தது. வானத்தில் கினிக் கோழிகளாக கருமேகங்கள் சிதறிக்கிடந்தன.
அந்த
விடுதி வாசலை மிதிக்கும் போது பத்து பதினைந்து பேர் வெளியே வந்தனர். அவர்களில் ஒருவர் லுங்கிகட்டி, வெள்ளைத்துண்டால் தலைப்பாகையாக சுற்றி
இருந்தார். அவரது மீசையும் கண்ணாடியும் அவர்தான் ஜெயகாந்தன் என்பதை சுட்டியது.
நாங்கள் இருவரும் வாசலுக்கு வெளியே
ஒதுங்கி அவர்கள் வெளியேவர வழிவிட்டோம்.
நான்
முத்துநிலவனை அழைத்துச் சென்று
ஜெயகாந்தனிடம், “தோழர் ஜே.கே வணக்கம். இவர் தோழர் முத்துநிலவன். உங்களைப் பார்க்க புதுக்கோட்டையிலிருந்து வந்திருக்கிறார்.
முத்துநிலவன் புன்னகைத்த படியே கரங்களைக் குவித்தார். ஜே.கே அவரை
ஊடுருவிப் பார்த்தார். “ஆமாம்
நீங்க எழுதின கட்டுரையை பார்த்தோம்” “நன்றி
தோழர். அந்தக்கட்டுரைகள் புத்தகமாக வந்துள்ளது. உங்களைப் பார்த்து கொடுத்திட்டுப் போகலாம்னு வந்தேன்” என்ற
படி முத்துநிலவன் கைபையிலுள்ள புத்தகங்களை எடுக்க முயன்றார். “மகிழ்ச்சி, வாங்க செத்தநாழி காலாற நடந்திட்டு வருவோம்”
நாங்களும் பொன்னமராவதி அமரகண்டான் ஊரணியின் வடகரையோரம் நடந்தோம்.அந்தக்
கூட்டத்தில் முருகேச பாண்டியன் சந்திரகாந்தன், உ.ராஜாஜி, சேதுபதி உள்ளிட்ட பத்துக்கு மேற்பட்ட ஜெயகாந்தனின் நண்பர்களும், “சபை” அங்கத்தினர்களும் இருந்தனர். ஏதோதோ பேசிக்
கொண்டே வந்தனர். ஒவ்வொரு பேச்சிற்கும் ஜெயகாந்தன் தனது
பார்வை அசைவால், புருவ
அசைவால், தலையாட்டலில் பதில்
கொடுத்தார்.
இந்த
அசைவுகளில் ஜே.கே நிறைய
விஷயங்களைச் சொல்வதாக சபை
அங்கத்தினர் உணர்ந்து அங்கிகரித்தபடி நடந்தனர்.
ஊருணியில் கரும்பச்சைப் படலமாக நீர்
படர்ந்திருந்தது. வானத்திலிரந்து ஒவ்வொரு துளிகள் விழுந்து கரும்பச்சை நீர்ப்போர்வையை கிழித்து உலுக்கியது எட்டுத்துறை படிக்கட்டுகளிலும் ஆண்கள், பெண்கள் தனித்தனியே குளிப்பவர்களும்,துவைப்பவர்களும் தென்பட்டார்கள்.
முருகேச பாண்டியன் சொன்னார் “ஜே.கே,
மழை வரும்போலிருக்கிறது.. ரூமுக்கு திரும்பியறலாமா…”
“வரட்டுமே… நனைந்தால் என்ன என்படி ஜெயகாந்தன் தன் பரிவாரங்கைப் பார்த்தார். அவர்கள் அமைதியாக இருந்தார்கள்.
சந்திகாந்தன் தயங்கியபடி “உங்க உடம்பு
பழைய மாதிரி இல்லையே ஜே.கே, உடம்புக்கு ஒத்துகாதில்ல..”
“அப்படியா” என்றபடி பரிவாரங்களைப் பார்த்தார். “ஆமாம்
தோழர்” என்று
கூட்டிசையாக குரல் வந்தது.
இதற்குள் பெரும்தூறல்கள் படபடவென கொட்டின.
“சரி
வாங்க இந்தத் டீக்கடையில ஒதுங்கினபடி மழையையும், மக்களையும் பார்ப்போம்…” டீக்கடைக்குள் எல்லோரும் நுழைந்தோம்.
டீக்கடைக்காரர் “எத்தனை டீ வேண்டும் சக்கரையில்லாதது எத்தனை” என்றார்.
எல்லோரும் ஜெயகாந்தனைப் பார்த்தோம் எமக்கு
வேண்டாம் வேண்டியவர்கள் குடிக்கலாம்” என்றார். சேதுபதி ஓடிச்சென்று தலைப்பாகையும் கைலியுமாக இருப்பவர் ஜெயகாந்தன் என்றும் அவரது சிறப்புகள் குறித்து சுருக்கமாக சொல்லவே, அவர் வேட்டியை கால்வரைக்கும் அவிழ்த்துவிட்டு பவ்வியமாய் வணங்கி, உள்ளே வந்து உட்காரச் சொன்னார்.
“பரவாயில்லை, நன்றி. இங்கே நின்றபடி இந்த மண்வாசனையையும், மக்களையும் ரசிப்போம்” என்றார்.
மழைவலுத்தது சாரல் கடைக்குள் விழுந்தது.
“அய்யா
நீங்க எங்கஊருக்கு வந்தநேரம் பூமி குளிர்ந்து போச்சு. மூனாவது கட்டிடம் நம்ம
மண்டபம் தான். அங்கே
சேர், பேன் வசதி
எல்லாம் உண்டு. மழைவிடற வரை சௌகரியமா உக்காந்து பேசிட்டு வாங்க” என்று
டீக்கடைக்காரர் பவ்வியமாகச் சொன்னார்.
ஜெயகாந்தன் அவரை ஊடுறுவிப் பார்த்தார். “மகிழ்ச்சி, உங்க அன்பு
எம்மை நனைச்சிருச்சு” என்றபடி பரிவாரங்களைப பார்த்தார். டீக்கடைக்காரர் விளங்காமல் விழித்தார். சேதுபதி டீக்கடைக்காரரிடம் சொன்னார். மண்டபத்தில் உட்காரப் போவதாக.
மண்டத்தில் நுழைந்தோம். வசதியாகத்தான் இருந்தது. ஜெயகாந்தனை நடுநாயகமாக இருக்கவைத்து எல்லோரும்; வட்டமாக உட்கார்ந்தோம். ஜெயகாந்தன் என்ன பேசுவார் என்று ஆர்வத்தோடு எதிர்பார்த்தோம். அவர் தலைப்பாகைத்துண்டை கழற்றி
உதறி தோளில் போட்டுக் கொண்டு களைந்த முடியை
சரிசெய்து கொண்டார். பவுர்ணமிக்கு மறுநாள் நிலாவைச்சுற்றி வெண்மேகப் பிசிறுகள் அங்குமிங்கும் படிந்தது போலிந்தது. கண்ணாடியைக் கழற்றி
துடைத்து மாட்டி மீசையை
தடவிசரிசெய்தார்.
ஆச்சரியமாய் இருந்தது ஏதோ ஏற்பாடு செய்தது போல் இருபது
முப்பது பேர் பள்ளி
ஆசிரியர்கள், ஆசிரியைகள், கல்லூரி மாணவர்கள், முதியவாசகர்கள் என மொது
மொதுவென நுழைந்து வணக்கம் சொல்லி வட்டமாக இருக்கைகளைப் போட்டு உட்கார்ந்து கொண்டார்கள்.
நான்
ஜே.கேயிடம் போய், ஜே.கே, தோழர்
முத்துநிலவன் உங்களிடம் அவரது
நூலைக் கொடுத்துவிட்டு, தங்கள்
அனுமதியோடு அவசரமாய் மருத்துவமனைக்கு மனைவியை அழைத்துச் செல்லவேண்டுமென்கிறார். எதிர்பாராமல் கூட்டம் கூடிவிட்டது. அவர் புத்தகத்தைக் கொடுத்ததும், புத்தகத்தைப் பற்றியோ, பொதுவாகவே கொஞ்சநேரம் பேசினா
எல்லாத்துக்கும் மகிழ்ச்சியா இருக்கும்!” என்றேன்.
“என்ன, சுக்கு கண்ட இடத்தில் பிள்ளை பெறச்சொல்றே” என்று
சொல்லி சில வினாடி
யோசித்து கீழிருந்து மேலாக
தலையை வலப்புறமாக அசைத்தார்.
நான்
முத்துநிலவனை அருகில் அழைத்தேன். அதற்குள் பர்தா அணிந்த
ஒரு பெண் நேராக
ஜெயகாந்தனிடம் முன்நின்று “வணக்கம் சார். நான் உங்கள்
தீவிர வாசகி” என்று
வணங்கினார்.
ஜெயகாந்தன் பெருமிதமாய் அந்தப் பெண்ணைப் பார்த்தார். நான் அந்தபெண்ணை அடையாளம் கண்டு “இவர்
மைமூன் பேகம் எங்கள்
கல்லூரியில் பேராசிரியராக இருக்கிறார். எனது மகள் மாதிரி” என்றேன். ஜே.கேயின் புருவம் கேள்வி குறியாக நிமிர்ந்து வளைந்தது. “சாதி மதத்துக்கப்பால் அப்பா மகள் உறவு
முறை சார்” என்றார் மைமூன். “சபாஷ் அப்பல்லாம் சாதி, மதங்களுக்குள்ள இணக்கம், உறவு இருந்தது. இப்போ
பிணக்குத்தான்….” என்று
பெருமூச்சுவிட்டார். அந்தப்
பெண் மீண்டும் வணக்கம் சொல்லி அமர்ந்தார்.
முத்துநிலவன் அருகில் வந்தார். நான்
அவரை அறிமுகப்படுத்தி பேச
ஆரம்பித்தேன். ஜே.கே கை அசைத்தார். நான் பேச்சை நிறுத்தினேன். முத்துநிலவன் “ஒரு ஜெயகாந்தனும் சில ஜெயகாந்தன்களும் - ஒரு
மாறுபட்ட விமர்சன நடை” என்ற
புத்தகத்தின் இரு பிரதிகளைக் கொடுத்தார். ஜே.கே தலைப்பை பார்த்துவிட்டு முத்துநிலவனின் கால்களைப் பார்த்தார்.
ஜே.கேயின்
குறும்பை நாங்களிருவரும் புரிந்துகொண்டோம். அவர் சபை பரிவாங்களைப் பார்த்தார். அவர்கள் பொதுவாக மௌனப் புன்னகையை வெளிப்படுத்தினார்.
“கோவிச்சுக்காதீங்க தோழர். இப்போ வரும்
போது மழையில் புத்தகம் நனைந்துவிட்டது. “நாம் நனைய
நினைத்தோம். இயலவில்லை என்
பெயராவது நனைந்தது பெரு
மகிழ்ச்சி பெருமகிழ்சி!” என்றபடி அவையை பார்த்தார்.
என்னையாரோ உதைப்பது போலிருந்தது ஒருவயது பேரன்
தூக்கத்தில் கால் போட்டான். “அய்யோ அருமையான கனவு
அறுந்துவிட்டதே….” அப்புறம் தூக்கம் இல்லை ஏக்கம்
தான்! இதை நினைவு
படுத்தி பதிவு செய்தபின் தான் பெரும் ஆதங்கம் நீங்கியது.
No comments:
Post a Comment