Monday, 26 November 2018

தொப்புள்கொடி உறவு


                   
                         தொப்புள்கொடி உறவு          (ஜனநேசன் )
             “அம்மா ,நிலோபர் ஆண்ட்டி போன் .” என்றுஆறுவயது  மகள் இந்து குரல் கொடுத்தாள்.            
            பாத்ரூமில்  இருக்கேன்,.இதோ வந்திர்றேன்.என்று குரல் கொடுத்தாள் கனகா.இணைப்பு  
            துண்டிக்கப்  பட்டுவிட்டது ;சத்தம் இல்லை.பிறந்த வீட்டிலிருந்தோ,பிறந்த ஊரிலிருந்தோ ,
            போனோ , தகவலோ வந்தால் உள்ளத்திலும் உடலிலும் ஏற்படும் உற்சாகமே தனிதான்.    
                கரிம்நகரில் கனகா    நிலோபருடன்   முதல் வகுப்பிலிருந்து  கல்லூரியில் இளநிலை
            கணிதவியல் வரை ஒன்றாகவே படித்தாள்..இருவருக்குமிடையே எந்த ரகசியமும்
            இல்லை .யஸ்வந்த்குமாரை இவள் காதலித்ததும்,பெற்றோரிடம்சொல்லத் தவித்தபோது  ,
           உதவியும்  பழங்குடி பையனை காதலிப்பதற்கு பெற்றோர் மறுத்தபோதும்   சமாதானம் ,
           சொல்லியும்  பெற்றோரை மீறி கல்யாணம் செய்தபோது ,இவளுக்கு முந்தியே மணமானவள்  
            என்ற முறையில் ஆறுதலும் ,அறிவுரையும் சொன்னவள் நிலோபர் தான்!.அவளிடமிருந்து  
            அழைப்பு வந்தால் எதாவது விசேசத் தகவல் இருக்கும்.!                               .
            .
                    கடந்த முறை அவள் பேசியபோது அம்மா இறந்த தகவல் சொன்னாள்.
            அப்பாவும்,தம்பியும் தகவல் சொல்லாதது ,அம்மா இறந்ததைவிட ,பெரும் பாதிப்பாக
            உணர்ந்தாள்.
                 அவனை மணந்தால் எங்கள் முகத்தில் விழிக்கக் கூடாது.என்று சொன்ன
            வார்த்தைகளை நிஜமாக்கப் பார்க்கிறார்களே  ?இதயத்தை பிடுங்கி எறிந்தது போல்
            உடலெங்கும் உதறல். மெல்ல நிதானப்படுத்திக் கொண்டு,கணவனையும் ,அழைத்துக்
           கொண்டு கைக்குழந்தையோடு கரீம்நகர் வந்தார்கள்.உடலில் பதற்றம் பற்றிக் கொண்டது..
           தன்னை மதித்து வந்த கணவனுக்கு எந்தவித அவமானமும் ஏற்பட்டுவிடக்கூடாது ,
           அம்மாவின் முகத்தை அச்சுஅசலாக எதிரொளிக்கும் பேர்த்தி இந்துவை பார்த்தாவது
           அப்பா ஆறுதல் அடைவார்.வங்கி அலுவலராக இருக்கும் மருமகனைப் பார்த்து ,சமரசம்
           ஆகலாம்.எனினும் எந்தவிதமான அசம்பாவிதமும்கணவனுக்கு  ஏற்பட்டுவிடக்கூடாது என்று  
           நினைவுக்கு  வந்த அத்தனைக் கடவுள்களையும் வேண்டிக் கொண்டாள்.வெளிச்சுவர் இரும்புக்  
           கதவை திறக்கும் போதே தம்பி வெளியில் வந்துவிட்டான்.
           மொட்டைத்தலையில் ஒருமாத  முடி முளைத்திருந்தது.அவனை பார்த்ததும் அழுகை பீறிட்டது.
            அவன்,அவளைப் பார்த்து ,”யார் நீங்க?எதுக்கு இங்க வந்திங்க?ஓடிப்போய் அம்மாவைக்
           கொன்னது போதாதுன்னு ,எங்க அப்பாவையும் கொல்ல வந்திட்டிங்களா?” என்று
           வார்த்தை சவுக்கால் சுழட்டினான்.
           “டேய்,டேய்.என்னை பேசியே  கொல்லாதடா,நாங்க அப்பாவைப் பார்த்து  துக்கம்
            விசாரிச்சிட்டு போயிட்றோம்டா.”
            “வெட்கம் கெட்டு ஓடிப்போனவ துக்கம் தாங்காமத்தான் அம்மா மண்டையைப்
            போட்டுட்டா ; அழுது நாடகமாடி அப்பாவையும்கொல்லப் பார்க்கிறியா...?வெளியே
            போ “என்று உள்பக்கமாக வெளிக்கதவை பூட்டிவிட்டு உள்ளே போய்விட்டான்.
                தெருவில் ஒருவயது குழந்தையோடு ,கணவனுடன் நின்றுஅழுது  அவமானப்
            படவேண்டாம்.என்று திரும்பினாள்.இவள் குரல் கேட்டு பக்கத்து வீட்டு அத்தை
            வந்து .தன் வீட்டுக்குள் அழைத்துப் போனாள்.தம்பி ஐதராபாத் பல்கலைகழகத்தில்          
            படித்துக் கொண்டிருந்தபோது, கொழுந்துவிட்டு எரிந்துகொண்டிருந்த தனித்தெலுங்கானா           ,                              
            மாநிலம் கோரி நடந்த போராட்டத்தில் கலந்து கொண்ட மாணவர்களை காவல்துறை
           
           வேட்டையாடியபோது ,புறநகரில் இருக்கும் அக்கா வீட்டை தேடிவந்தான்.காவல் துறையின்
            கவனத்தை தவிர்க்க கணவர்தான் தனது வங்கிஊழியர் ஒருவரின் கிராமத்து வீட்டில் ,அவனு
            க்கு வேண்டிய எல்லா வசதிகளையும் செய்யச் செய்து தங்கவைத்து காப்பாற்றினார் .
            அந்த நன்றி உணர்ச்சியில்லாமல் அவரை தெருவில் நிறுத்தி அவமானப்படுத்திட்டானே .
            இவன் நம்ம அம்மா,அப்பா பெற்ற பிள்ளைதானா என்ற ஆவேசம் இவளுக்கேவந்தது;தன்னை      
           கட்டுப்படுதிகொண்டாள்.எனினும்  கணவர் இதையெல்லாம் கண்டுகொள்ளாமல் பொறுமையாக ,
           இருந்தாரே  இவளுக்கு பெருமையாகவும் ஆறுதலாகவும் இருந்தது. 
               உடலில் சக்கரை அளவு ஏற்ற இறக்கத்தாலும் குறைந்த ,இரத்த அழுத்தாலுமேஅம்மா                                                                                                                                                                                                                                                              

             இறந்ததாக பக்கத்துவீட்டு அத்தை சொன்னார்.அம்மா இறந்து முப்பது நாளுக்கு
          மேலாகி விட்டதாம்.அம்மா இறப்பதற்குமுன்னதாக ,நிலோபர் கொடுத்த இவளது வீட்டு
          தொலைபேசிக்கு பகலில் ,தம்பியும்,தம்பி மனைவியும் இல்லாத நேரத்தில்அத்தை
          வீட்டு தொலைப்பேசி மூலமாக அம்மா பேச முயன்றிருக்கிறாள்.மூன்று நாள்கள்முயன்றும்  
          வீட்டில் இவளும்,கணவனும் வேலைக்கு போனதால் பேசமுடியவில்லை.அம்மா கண்ணீர்
            பெருக்கினாளாம்..மருமகன் வங்கி அலுவலராகவும்,மகள் பள்ளிஆசிரியராகவும்  
           .இருப்பது பற்றியும்,பேத்தி பிறந்தது பற்றியும் அம்மா ஆனந்தக்கண்ணீர் பொங்கப்
            பேசினாளாம் .அத்தை சொன்னார்.பக்கத்துக்கு வீட்டு அத்தை கூறிய தகவலும்.
         கொடுத்த காபியும் இதமாக இருந்தது.தம்பி மனைவி  வீட்டுக்குள் யாரையும்
         அண்டவிடுவதில்லையாம் .அம்மாவும்,அப்பாவும் ,மகனும் ,மருமகளும் இல்லாத
         நேரத்தில் தான் வெளியே தலை காட்டுவார்களாம்.தம்பி வீட்டை சுற்றி அகழி
         வெட்டி ,அதில் மனைவி என்னும் முதலையை நீந்தவிட்டு விட்டானோ...
         இவளுக்கு  ஆவேசம் பொங்கியது.அவரகளோடு  சண்டை போடுவதை விட ,
         ஒதுங்கிப் போவதுதான் தனது கணவனுக்கு இவள் பெற்று தரும் மரியாதை.!அன்று
         திரும்பி வந்து விட்டார்கள்.
                       இன்று நிலோபர் பேசுகிறாள்.என்ன தகவலை சொல்லப் போகிறாளோ ..
          தவிப்பும்,தகிப்பும் பல்வேறு எண்ணங்களைக் கிளப்ப,கழிவறையிலிருந்து  வெளியே
          வந்தாள்.அடுப்படி வேலைகளை ஒழுங்கு செய்துவிட்டு.கைப்பேசியை இயக்கினாள்.
          நிலோபர் தொடர்புக்கு வந்தாள்.அவளது மகள் மெஹ்ருநிஷா பூப்படைந்து  விட்டாளாம்.
          இன்றைய பொருளாதாரநிலையில் தனியே ஏதும் விழா ஏற்பாடு செய்யவில்லை.
          எங்கள் வீட்டளவில் முடித்துக் கொள்கிறோம்.உனக்கு நேரம் வாய்க்கும்போது வா;
          என்றவள் ,உங்க அப்பா இறந்து விட்டாராம்.இன்று காலையில் மெஹ்ருநிஷா விசயமா
          நாத்தானார் வீட்டுக்கு தகவல் சொல்ல போனபோது,போக்குவரத்து சிக்னலுக்கு
          காத்திருந்தோம்.இடப்புறம் உன் தம்பியும் காத்திருந்தான்.மொட்டை தலையாக இருந்ததால்       
          என்ன விபரம் என்று கேட்டபோது ,அப்பா இறந்துவிட்டார் என்றான்.விவரம் கேட்பதற்குள்
          சிக்னல் வழிவிட  அவரவர் வண்டியைக் கிளப்பவேண்டியதாயிற்று.அவன் இந்த சாக்கில்
          பறந்து விட்டான்.நிலோபரின் தகவல் , இவள் தலையில் இடிவிழுந்த மாதிரி இருந்தது.இவள்  
          தொற்றுவதிற்கிருந்த  அப்பா என்ற கிளையும் முறிந்து விட்டது.மனதை  தேற்றி கொண்டு ,
          அடுத்த ஞாயிற்றுகிழமை .மருமகளை  வாழ்த்த வருகிறேன் என்று இணைப்பைத்துண்டித்தாள்.
                                    கனகாவும் ,மகள் இந்துமதியும் கரிம்நகரில் நிலோபர் வீட்டுக்கு
          காலை பத்துமணிக்கு  சென்றனர்.மெஹ்ருநிஷவுக்கு வாங்கி வந்த சுடிதாரை அணிவித்து
          வாழ்த்தினர்.நிலோபர் வீட்டில் மதிய உணவுண்ட ,தோழிகள் இருவரும் பால்யநினைவுள்  
         குதித்து நீந்தி அளவளாவினர்.மெஹ்ருநிசாவும் இந்துவும் அவர்களது படிப்பு,சினிமா என்று
         பேசி அடுத்த தலைமுறை நட்பை பதியம் போட்டனர்.இந்து  ராக்கியை நினைவூதட்டினாள்; ,
        நிலோபரின் வீட்டுக்கு வரும் வழியில்  ரக்சபந்தன்கயறுகளோடு  எல்லோரும் போவதைப்  .
       பார்த்து கனகா சிலிர்த்துப் போனாள். ராக்கி கயறுகள் வாங்கி வந்தாள்.கைப்பயிலிருந்தராக்கி
       கயறெடுத்து ,நிலோபரின் கணவன் நாசருக்கு கனகா ராக்கி கட்டினாள்.அந்திப்பொழுதில்
        செம்மேகமும்.கருமேகமும் கலந்து நிறமயக்கத்தை ஏற்படுத்துவது போல் கனகாவின்முகம்
        பாசமயக்கதில் மருகியது.இந்து நிலோபருக்கும் ,மெஹ்ருநிஷவுக்கும் ராக்கி கட்டிவிட்டாள்.
                           சற்று ஓய்விக்குப் பின் கனகா மகளுடன்,நிலோபர் குடும்பத்தினரிடம்  
         விடைபெற்றாள்..கனகா தயங்கி, தயங்கி , அடுத்த தெருவிலிருக்கும் தாய்வீட்டிற்கு,மகளை
       அழைத்துச் சென்றாள்.வெளிவாயில் இரும்புகதவை திறந்து உள்ளே போனார்கள்.நாய் ஒன்று
       மூச்சுவிடாமல் குரைத்தது .அதை லட்சியப்படுத்தாமல் உள்ளேபோய் முன்வாயில் கதவை
       கனகாதள்ள  இரட்டைகதவு விரியவும்,மொட்டைத்தலையோடு தம்பி வரவும் ஒத்திசைவாய்
       இருந்தது.அவன் அதிர்ந்து நின்றான்.இவள் மடமடவென்று துயரம் கவிந்தஅறைக்குள்ளேசென்று  
       பூ போடப்பட்ட அம்மா,அப்பா படங்கள் முன்னே குனிந்து அழுதாள்,என்ன நடக்கிறதென்று  
       அறியாத  இந்துவின்முகம்  கலங்கி கண்ணீர் திரண்டிருந்தது.தம்பி  உறைந்து தலை குனிந்.
       திருந்தான்.மிகையான ஒப்பனையில் மனைவி முறைத்து நின்றாள்.
       “ ஏப்பா,  அப்பா செத்த செய்தி சொல்லக் கூடாதா? நான் அந்த அளவுக்கு செய்யக் கூடாத
        தப்பையா செஞ்சிட்டேன்? போலிஸ் உன்னை விரட்டும்போது அக்கா,அக்காபுருசன்நினைப்பு .
        வந்தது ;பெத்த தாய்,தகப்பன் செத்ததுக்கு அக்கா நினைப்பு வராதா?என்னடா மனுஷன் நீ?
        நான் குடிச்ச எச்சிப்பாலை குடிச்சவன்;நான் தூக்கி வளர்ந்தவன்,இன்னைக்கி ,அக்கான்னா
        உனக்கு பச்சநாவியா  இருக்கா? நான் வந்து உன் சொத்தையா பங்கு கேட்ருவேன்?நாங்க 
        யார்கிட்டையும் கையேந்திப் பிழைக்கிற அளவில் இல்லை.நீயும் உன் பொண்டாட்டியும்
        வந்தாக்கூட உக்காரவச்சு சோறு போடற அளவுக்கு வசதி இருக்கு.!”என்று வெடித்துக்
        குமுறினாள்.
              பாசக் கேள்விகளின் வெக்கை தாங்காமல் ,அவனது மனைவி வீட்டுக்குள் ஓடி
        விட்டாள்.இந்து மெல்லப்போய் ,கல்லாய் நிற்கும்அவனதுவலது கையைபிடித்துஇழுத்து
        “நீங்க தான் வெங்கடேஷ் மாமாவா..”அவன் மூசுமூசு வென்று விம்மியபடி அவளை,
        இறுக அனைத்துக் கொண்டான்.அவள் கேட்டாள் ,”என்னை மாதிரி அந்த போட்டோவில்
        இருப்பது லட்சுமி பாட்டியா...” அவன் அவளைத் தூக்கி முகத்தை உற்றுப் பார்த்து இரு
        கன்னங்களிலும் மாறி,மாறி,முத்தம்கொடுத்தான்.அவள் திமிறி கீழே குதித்து ஓடி,
        அம்மாவின் பையை எடுத்தாள். கனகா ,அந்த பையை வாங்கி,அதிலிருந்து ராக்கி கயிறை
        எடுத்து,”நீ,அக்காவை நினைக்காவிட்டாலும் சரி,ஒரு தாய் வயிற்றில் பிறந்த தொப்புள்கொடி
        உறவுக்காக கட்டுகிறேன்”என்று அவனது வலதுகையை இழுத்து கயிறை கட்டிவிட்டாள்.
        மறுகணம் .மகளை இழுத்தக் கொண்டு கனகதுர்கா  வாசலை நோக்கி விரைந்தாள்.       .      

No comments:

Post a Comment