Monday, 26 November 2018

ஆன்மநேயம்

ஆன்மநேயம்
-               ஜனநேசன்
இவன் வேகமாய் நுழைந்து அறைக்கதவை உள்பக்கமாகத் தாழிட்டுக் கொண்டான். வங்கியிலிருந்து அறைக்குள் வருவதற்கிடையில் அழுதுவிடுவோமோ என்ற அச்சம், இடிஇடித்து மனசு குமுறியது. கண்களில் நீர் முட்டிக்கொண்டிருந்தது. வாயைத் திறந்தால் விம்மல் வெடித்திடுமோ என்று இறுக்கமாக மூடியிருந்தான்.
உடன் பணியாற்றும் சக ஊழியர் ஒருவன் இவனது ஆண்மையை சந்தேகிக்கும் படியாகக் கிண்டல் செய்தான். அனுமன்பக்தன், பிரம்மச்சாரியாக இருக்கிறது ஆண்மைக்கு இழுக்கானதா?
இன்று வங்கியில் புதிதாகப் பணியில் சேர்ந்தவர்களுள் அறுவர் பெண்கள். இருவர் ஆண்கள். அவர்களை வரவேற்று வாழ்த்தும் நிகழ்வுக்கு இவனையும் சகப்பணியாளர்கள் அழைத்தனர். இவன் செல்ல மறுத்தான் அந்தப் பெண்களில் யாராவது ஒருவர் இவனுக்கு காதலியாகலாம் வருங்கால மனைவியாகலாம் என்றனர். இவன் கூச்சத்தோடு மறுத்தான். “எத்தனை நாளுக்குத்தான் இப்படி பிரம்மச்சரியாகவே இருப்ப? நீ பெண்களோடு பேசத் தயங்குவதைப் பார்த்தால் உனக்கு கல்யாணமேத் தேவைப்படாத உடம்போ” என்று சிரித்துக் கொண்டே ஒருவன் பனிக்கத்தியை நெஞ்சில் சொருகி விட்டான். சுற்றியிருந்தவர்களின் வெடிச்சிரிப்பில் இவனது இதயம் வெடித்துவிடவில்லை என்பதே ஆச்சரியம்.
உள்ளே நுழைந்தவன் உடைகளைக்  களைந்து குளியலறையில் தனக்குத்தானே சோதித்துவிட்டு வந்தான். எல்லோரையும் போலத்தானே நானும் இருக்கிறேன். மற்றவர்களைப் போல பெண்களைப் பற்றி கண்டது கடியதைப் பேசிக் கதைகளைக் கட்டி அந்த போதையில் இன்பம் காண விரும்பவில்லை. பெண்  என்றால் பெண்தான். பள்ளியில் படிக்கும் காலத்திலிருந்து அளவாகப் பேசுவான். விடலைப் பருவத்தில் கூட பெண்களிடம் இவனுக்கு அதீத ஈர்ப்போ, விருப்போ, வெறுப்போ இருந்ததில்லை. உடன் படிப்பவர்கள்  பெண்கள் என்ற வகையில் இருந்தான்.
அவன் சிறுவயதில்     அம்புலிமாமா  படிக்கிற    காலத்திலிருந்தே அனுமன் மீது ஒரு ஈர்ப்பு. வாசிப்பு உயர உயர அனுமனின் பலவகையான சாகச ஆற்றல், தொண்டுள்ளம், தற்பெருமையின்மை ஏற்றுக் கொண்ட தலைவனிடம் தன்நலம் மறந்த விசுவாசம். கொடுத்த பணியினை செம்மையாகச் செய்தல். அழகுற கனிவாகப் பேசுதல் - இதெல்லாம் அனுமனிடம் கற்றது. பக்தியாய் மாறியது. இந்த குணங்களே சாதாரணக் குடும்பத்தில் பிறந்தவனை வங்கிஅலுவலர் நிலைக்கு உயர்த்தியது என்ற எண்ணமுண்டு.. இன்னும் இவன் எட்டவேண்டிய உயரம், பிறர்க்கு செய்ய வேண்டிய சேவை அதில் கிடைக்கும் ஆன்ம திருப்தி என்ற தொடுவானம் உயர்ந்து கொண்டே போகிறது.
குளித்து விட்டு வந்து படுத்துவிட்டான். இரவுணவு   சாப்பிடத் தோன்றவில்லை. குளியலறைக் கண்ணாடியில் நீர் படிவு படிந்து மங்கலாகத் தோன்றுவது போல இவனது மனதிலும் சினமும், சிந்தனையும் கப்பியிருந்தது.
பிரம்மச்சாரியாக இருப்பது ஆண்மை இன்மையா, பெண்களுக்கும், பெண்ணுறவுக்கும் எதிரானதா? அனுமன் ஆணில்லையா? பெண் விரோதியா? அனுமனை வணங்குவதால் இவன் ஆண்மை இல்லாதவனா? ஏன் சமூகம் இப்படி எல்லாம் மனத்தைக் கொத்தி ரணமாக்கி மகிழ்கிறது - என்ற கேள்விகளில் புரண்டு புரண்டு கண்ணயர்ந்தான்.
ஜீன்ஸ்பேண்ட்டும் செந்தூரநிறச்சட்டையும் நவீன முடியலங்காரமும், அனுமன் முகமும் கூடிய உருவம் இவனைப் பரிவுடன் தொட்டது. ஆறுதலாய்ச் சிரித்தது.
இவன் துள்ளி எழுந்தான். அனுமன் காலில் விழப் போனான். அவன் இவனைத் தடுத்து நெஞ்சிலணைத்துக் கொண்டான். மென்மையும் வலிமையும் இணைந்த இதம் உணர்ந்தான், இவன்! “என் அன்பன், நீ அழலாமா? உனக்கு என்ன பிரச்சினை சொல்!”கேட்டான் அவன்.
“ராம தூதனே, நீ உன்னை வணங்க வருகிறவர்களை வணங்குவதை கேள்விப் பட்டிருக்கிறேன் . வீடு தேடி வந்திருப்பதை இப்போதுதான் பார்க்கிறேன்.’’என்று இவன்  ஆச்சரியத்தோடு தொடர்ந்தான்.
“ஒன்றுமில்லை ரட்சகா, உன்னை வணங்கும் என்னைப் போன்ற பிரம்மச்சாரி ஆண்மை இல்லாதவன் என்ற வகையில் ஒருத்தன் பேசி என் மனசை புண்ணாக்கிட்டான்.
நீ எவ்வளவு ஆளுமையுள்ள ஆண் மகன்! உனதன்பன் ஆண்மை இல்லாதவனா நீ பெண்களுக்கு எதிரானவனா? பெண்களை வெறுக்கிறவனா?”
 “அன்பனே, யார் சொன்னார்? பிரம்மச்சரியம்  பெண்ணுக்கு எதிரானது என்று; ஒருவருக்குள் பொங்கும் ஆசை அபிலாஷைகள் அலைந்து அலைந்து மனதிடத்தை உடைத்துவிடக் கூடாது அவற்றை மடைமாற்றி பொதுநலச் செயல்பாடுகளில் திருப்பிவிட வேண்டும் இதுவே பிரம்மச்சரியத்தின் நோக்கம் பிரம்மச்சரியத்தைப் பூணும் பெண்களும் உண்டு. நான் பெண்களுக்கு எதிரானவனில்லை. எனது வரலாற்றை மீண்டும் படித்துப் பார். வாலியின் மனைவி தாரை, சுக்கிரீவனின் மனைவி உருமை ஆகியோரிடம் நான் கண்ட  தாயன்பு,; பாதாள நகரத்தில் அடைபட்ட சுய பிரபையை மீட்ட எனது பரிவு; தாய் சீதையைத் தேடி நான் தென்கடலில் பறந்த போது என்னைத் தடுத்த நாகமாதா சுரசை, அங்கார தாரை ஆகியோரை நான் பணிந்து கேட்டபின்னும் வழிதறாதபோது அவர்களை வென்று கடந்த சீலம்! என்னால் தோற்கடிக்கப்பட்ட இலங்காதேவி மீது நான் காட்டிய அனுதாபம். மண்டோதரி மீதான எனது பரிவுப் பார்வை, வீடணின் மகள் திரிசடை மீதுள்ள என் மரியாதை இப்படி பெண்கள் மீதான எனது மனநிலையை உணரலாம். பெண்களுக்கு எதிரானவன் அல்லன் நான்”
“நன்றாக சொன்னீர், கருணை ரட்சகனே, இங்கு நீ வராவிட்டால் நான் தற்கொலை கூட செய்து  கொண்டிருப்பேன்”.
“எனதருமை அன்பனே, தற்கொலைக்கான தேவை என்ன? நான் உனதருகே இருக்கும் போது உன்னை எப்படி தற்கொலைக்குத் தள்ளுவேன்?”
“ஆமாம், வாயுபுத்திரனே நீ சொன்னதும் ஒரு கேள்வி எழுகிறது. சீதையைத் தேடும் முயற்சி வெற்றி பெறாது தாமதமாவது கண்டு மலையிலேறி கீழே விழுந்து சாவேன் என்று சபதம் செய்து  சுக்கிரீவனை ஆறுதல் படுத்தி,. இலங்கைப்பயணம் தொடங்கினாய்! இலங்கையிலும் சீதாப்பிராட்டியை மீட்க ராமன் வரவில்லையே என்ற ஆதங்கத்தில் உணாக்கொடியை மரத்திலிட்டு தன்னை மாய்த்துக் கொள்ளும் மனக் கலக்கத்திலிருந்த  சீதை முன் தோன்றி, ராமனின் கணையாழியைக் காட்டி சீதையின் மனத்தைத் தேற்றினாய்! அப்புறம், இறுதிக்காலத்தில் இராமன் மனம் நொந்து சரயு நதியில் குதித்து முக்தியடைந்த போதும், அதன் பின் இராமனின் உடன்பிறப்புகளும் அவ்வழியே முக்தியைத் தேடிக் கொண்ட போதும். ஏன் சென்று தடுக்கவில்லை. அது முக்தியடையும் வழியென்றால் இராமனது சிறியதிருவடியாகிய நீ ஏன் ராமன் வழியை பின்பற்றவில்லை?”
“பக்தநேசனே நல்ல கேள்விதான்! ராமன் இம்முடிவை மேற்கொள்ளும் போது நான் அயோத்தியில் இல்லை. அதுவுமில்லாமல் எனது தெய்வம் தனக்கு சரியென்று ஒரு முடிவை எடுக்கும் போது என்னிடம் தடுக்கும் சக்தி ஏது? ஆனால் நான் ராமன் புகழ்பாடி அன்பருக்கு தொண்டு செய்தே வாழ முடிவெடுத்ததால் நான் சரயுவில் இறங்கவில்லை”.
“ஆமாம் ஆபத்துபாந்தவனே , பெண்கள் மீது அன்புண்டு வெறுப்பு இல்லை என்கிறீர். நீங்கள் கற்பினுக்கு அணி என்று குறிப்பிட்ட சீதாப்பிராட்டியை, உங்களது அன்பு தெய்வம் இராமன் தீக்குளிக்கச் சொன்னபோதும், நிறைமாதக் கற்பிணியான அவளைக் காட்டில் கொண்டு போய்விடச் சொன்ன போதும் நீ வாய் திறக்கலையே?”
“அன்புநேசரே, சிக்கலான கேள்வியையே கேட்கிறீர். எனது அன்புத்தெய்வம் ராமன் என்னிடம் கலந்து கருத்துக்கேட்டபோதெல்லாம் பிறர்கருத்துக்கு எதிராக எனது கருத்தை அழுத்தமாகச் சொல்லியிருக்கிறேன் . வீபிஷ்ணனுக்கு அடைக்கலம் கொடுக்க என்னைச் சுற்றியிருந்தவர்கள் எல்லாம் எதிர்த்த போதும் அவனுக்கு அடைக்கலம் கொடுப்பது நல்லது என்ற எனது கருத்தை ராமச்சந்திரமூர்த்தி ஏற்றுக்கொண்டார். ஆனால்  தாய் சீதை விஷயத்தில் ராமன் மேற்கண்ட முடிவுகளுக்கு நான் தொண்டனுக்கு தொண்டன் என்ற முறையில் என்ன கருத்தைச் சொல்ல முடியும்? அவர் ஊர், உலகத்தார் வாயை அடைக்க அம்மாதிரியான முடிவுகளை கற்பினுக்கு அணி சீதைக்கு எதிராக எடுத்தார். ராமனோடு, தோளுக்கு தோளாக நிழலுக்கு நிழலாக இருந்தவனும் சமமாக விவாதிக்கவும் கருத்து சொல்ல தகுதி பெற்றவனுமான இலட்சுமணனே சீதை பற்றி இராமனிடம் கருத்து சொல்ல இயலவில்லை. இராமனுக்கான நியாயத்தில் சிறியதிருவடி நான் உடன்பட்டுத்தானே போகமுடியும்?”
 “சரி, லட்சுமணனைப் பற்றி என்ன நினைக்கிறீர்?” “என்னை ரட்சித்த ராமபெருமானின் இளவல், எனக்கு இளைய பெருமாள் அல்லவா? அவர் ராமன் பால்கொண்ட அன்புக்கும், அர்ப்பணிப்புக்கும் ஈடு ஏது. தனது அண்ணனுக்கு தொண்டாற்றவே தனது மனைவி ஊர்மிளையை விட்டுப் பிரிந்து, தன் காமத்தை செரித்த தவவீரனல்லவா? தன்னை விட்டுச் சென்ற கணவன் லட்சுமணன் திரும்பி வரும்வரை தியாகத் தீயில் வெந்த ஊர்மிளையும் தெய்வக்கற்பினள் அல்லவா? இப்படியான தியாக சீலனைக் காத்து எம்பெருமாளின் துணைக்கு உயிர் கொடுக்கவும் அல்லவா சஞ்சீவி மலையைத் தூக்கிவந்தேன் இலட்சுமணனுக்கான எனது அன்பைக் காட்டும் வாய்ப்பாகப் பாவித்தேன்”. “சரி ,உன் பெயரால் சிலர் வன்முறையில் ஈடுபடுகின்றனரே ?” “ஆமாம் .என்னையும்,இராமனையும் சரியாக புரிந்து கொள்ளாமல் பக்தியின் பெயரால் தவறு செய்பவர்களை நான் என்ன செய்யமுடியும்.நான் அன்பருக்கே அன்பன் ,வம்பருக்கல்ல.!”
“அஞ்சனை மைந்தனே, உன்னைக் கண்ட ஆர்வத்தில் பல விவரங்களைக் கேட்டுத் தெளிந்தேன். முக்கியமான கேள்வியைக் கேட்க மறந்தேன். பெண்களின் மீது அன்பும் மரியாதையையும் வெளிப்படுத்தும் நீ, ஏன் திருமணம் செய்து கொள்ளவில்லை? உங்கள் இனத்தில் பெண்ணோடு இணைந்த வாழ்வு தடை செய்யப்பட்டதில்லையே?”
“அருமை அன்பரே, என்னைப் பற்றி எழுதிய கவிகள் என்னை தொண்டால் உலகளந்தவனாகவே காட்டிவிட்டனர்!. எனது உளப்பாங்கும் அதுவே. எனது காலத்தில் பெண்கள் படும் பாட்டைக் கண்டு ஒருவருக்கு ஒருத்தி என்ற தத்துவத்தை நிலைநாட்ட சீதையைத் தவிர வேறொரு பெண்ணை மனதிலும் நினையா பேராண்மை கொண்ட எம்பெருமான் ராமன் பட்டபாடு; சீதையின் துன்பம்,   லட்சுமணனால் ஊர்மிளை பட்டதுயரம் ,, சுக்கீரீவன் மனைவி உருமையும், வாலி மனைவி தாரையும், ஏன் கௌதம முனிவரின் தர்மபத்தினி அகல்யைக்கும் ஏற்பட்ட இன்னல்கள்  எல்லாம் என்னை வருத்தின. . என் பிறவியை மேம்படுத்திட பொழுதெல்லாம் தொண்டுசெய்ய திருமணம் தடையாக இருக்கும் என்று நான் மணம் கொள்ளவில்லை.
இன்று உலகெங்கும் கல்வி, ஞானம் பெருகியும் பெண்கள் படும் பெருந்துயரம் நீங்கவில்லை. சீதை பட்ட சிரமங்களினும் பலமடங்கு அல்லல்படுகின்றனர். இவ்வாறு பெண்கள் படும் துயர் களையவே விரும்புகிறேன். அவர்களுக்கு துணை நிற்கவும் , ஆணுக்கு சமமாகப் பேணவும்  திருமணம் அவசியம்.! இன்று மறுபிறவி எடுக்கும் வாய்ப்பினை எம்பெருமான் வழங்கினால் சீதையை சிறைமீட்கப் போரிட்டதுபோல் பெண்கள் படும் துன்பம் நீங்க ஒரு சம்சாரத்துணை கொண்டு அவ்விடங்களுக்கே சென்று மீட்கப் பொராடுவோம் . ஆகவே எனது அன்புக்குரிய தொண்டர்களுக்கு தொண்டராக இருந்து சொல்கிறேன். திருமணத்துக்கு எதிரானவன் அல்லன். இந்த அஞ்சனை செல்வன். இல்வாழ்ந்து இன்னலைக் களையவே விரும்புவன். மனிதர் மட்டுமன்றி சக உயிர்களின் சங்கடம் தீர்ப்பதே ஆன்ம நேயம். இதுவே “என் வாழ்வின் செய்தி!” 
கனவு திரை விழ  அதிர்ந்து இவன் விழித்து எழுந்தான்.

No comments:

Post a Comment