சுட்ட தங்கம் (ஜனநேசன்)
‘சென்னை சர்வதேச விமான நிலையம்
வரவேற்கிறது ‘ என்ற தகவல் பலகை கண்சிமிட்டி ஒளிர்ந்தது . துபையிலிருந்து வந்த
விமானத்தில் இறங்கியவர்கள் தம் சாமான்கள்
வந்து இறங்கும் பகுதி நோக்கி நகர்ந்தனர்.இவன் இடது தோளில் கைப்பையை யும் வலப்பக்கம் இரண்டு வயது மகளையும் தூக்கி
இருந்தான். இவனது மனைவி
வலக்கையில் கைப்பையையும் ,இடது கையில் ஒருவயது
மகனையும் தூக்கி நெஞ்சில் அணைத் திருந்தாள். இவர்கள் சிறிது நேரம் நின்று வேகமாகக் கடந்து போவோருக்கு வழி விட்டனர். நெரிசல் குறைந்ததும்
பொருள் எடுக்கும் பகுதிக்கு நகர்ந்தனர். இவர்கள் நெருங்கவும்
சாமான் பொதி வரவும் இவன் குழந்தை
யை இறக்கிவிட்டு பொதியை எடுத்து இழுத்துக்கொண்டே மகளை மீண்டும் தூக்கிகொண்டு
நகர்ந்தான் .மனைவி இவனை பார்த்து சைகை
செய்யவும் , இவன் பொதியை அருகில் உட்காரும் இடத்தில் நிறுத்தி
வைத்துவிட்டு, மகளை இருக்கையில் உட்கார வைத்துவிட்டு ,மகனை வாங்கி மடியில்
வைத்தவாறு அமர்ந்தான் .மனைவி கழிவறை
நோக்கி நடந்தாள். .மகளும் வருவதாக அழவே ,அவளையும் தூக்கிக் கொண்டு விரைந்தாள். போனவர்கள்
வரவும் ,மகனைக் கொடுத்துவிட்டு இவன் போய்
வந்தான்.
விமானநிலையம் பகலில் ஒளிரும் இரவாக
வெளிச்ச த்தில் ஜொலித்தது. வெப்பமில்லா பகலா,
இரவா என்ற மயக்கம்.! தின்பண்ட கங்களும்
,மதுபான அங்காடிகளும் சுங்கத்தீர்வை விலக் கங்காடிகள் என பச்சை நிறத்தில் சிமிட்டின. வெளியேறும் இடத்து
பரிசோதனைக்காக நீண்ட வரிசை நின்றது.சிலரை
முக்கிய பிரமுகர்கள் என்று தனியே செல்ல ஆள்கள் வந்து அழைத்துச் சென்றனர்
.இவர்கள்எரிச்சல் பெருமூச்சு விட்டபடி
வரிசையில் நின்றனர். பெண்குழந்தை சுற்றிலும் ஒளிரும் விளக்குகளைப் பார்த்து
கண்ணயர்ந்தது.மகனும் அம்மாவின் மடியில் உறங்கினான் .இருக்கையில் உட்கார்ந்தபடியே
இவர்களும் நகர்ந்தனர்.சோதனை மேடை வந்தது.இவர்களது சாமான்
பொதி கதிர்வீச்சு சோதனை யில் ஏதுமில்லை.
நிம்மதியை சுவாசித்தனர்.
ஆனால்
தங்க நகைகள் சோதித்து எடைபோடப் பட்டன . வளையல்கள் நான்கு மட்டும் எண்பது கிராம்கள்
இருந்தன.இவள் அணிந்திருந்த தாலிச்சங்கிலியைக் கழற்றச்சொன்னார்கள் . .இவர்கள்
மறுத்தார்கள்.இவர்களை சுங்க அலுவலரிடம்
அழைத்துச்சென்றனர்.
அங்கே இவர்களுக்கு முன்னால்
பத்துபேர் காத்திரு ந்தனர். யானை போறதை விட்டுருவாங்க.பூனையைப் பிடிச்சு வச்சு
தண்டம் போட்டு பரபரப்பு பண்ணுவாங்க என்று முன்னால் நின்றவர்கள்
புலம்பிக்கொண்டிருந்தனர் .தாலியக் கழட்டி எடைபோடச் சொல்லுறாங்களே இவங்க
இந்தியன்களா ...என்று இவர்கள் கொதித்துக் கொண்டிருந்தனர். சுங்க அதிகாரி பெண் போல!.காதல்
மணமோ என்னவோ தென்னிந்திய பெண்பெயரும் வடஇந்திய ஆண்பெயரும் இணைந்திருந்தது.இவன்
நினைத்தான் ஆணாக இருந்தால் எப்படியும் சமாளித்து விடலாம்.பெண் புரியாமல் சட்டத்தை மட்டுமே
பேசுவாள்.மனைவி நினைத்தாள் பெண்தானே
குழந்தைகளைக் காட்டி இணக்கமாகப் பேசினால் புரிந்து கொள்வாள்.சமாளித்து விடலாம்.!
சுங்க அலுவலர் தன் முன்னுள்ள
காமிரா திரையில் பார்த்தார் .அவருக்கு
அதிர்ச்சியாக இருந்தது. இவன் எங்கே ,இங்கு வந்துள்ளான்? கையில் குழந்தையுடன்
கணவனும் மனைவியாக வந்துள்ளான் .இவர்களை உறுதிப்படுத்திக் கொள்ள தனது மேஜை யில் வைக்கப்பட்ட கடவுசீட்டுகளைத் தேடி இவர்களது ஆவணங் களை சரிபார்த்தார். இவனே
தான் அவன்.! தனது வாழ்வை சிதைத் தவனை பழி தீர்க்க காலம் தனது காலடியிலேயே இவனைக் கொண்டு
சேர்த்துவிட்டது.கடந்த நொடிவரை இயல்பாக சிரித்த முகத்தோடு பணியாற்றியவள்
மின்னலால் தாக்குண்டவள் போல் முகம் கருத்து உடல்தளர்ந்தாள்.அவளால் நிலைகொண்டு உட்கார்ந் திருக்க
முடியவில்லை.இவர்களுக்கு முந்தைய இருவரு க்கும் சுங்கத் தீர்வை விவரம் குறித்து வசூலிக்க உதவியாளரிடம்
உத்தரவிட்டு எழுந்து ஓய்வறைக்கு
விரைந்தாள்.
அந்த கணப் போதில் இவன் அவளைப் பார்த்துவிட்டான்.இவனுக்கு இடியும்,மின்னலும்
தலையில் இறங்கியதுபோல் தலை மீது
கைவைத்தபடி முனங்கினான். அவள் எப்படி இங்கு வந்தாள்? ஐயோ அவளாயிருந்தால் இன்றைக்கு
தம்மை அவமானப்படுத்தி பழிதீர்த்து விடுவாளே..!ஐயோ ,நான் என்ன செய்தேன்? ஒரு
குடிகாரி மனைவி யாக வருவதை எந்த இந்திய இளைஞன் ஏற்றுக்கொள்வான்? செய்த நிச்சயதார்த்ததை இரத்து செய்ய வைத்தேன்! இதே சூழலில் அவள் ஆணாக
இருந்து ,நான் குடிகாரப் பெண்ணாக இருந்திரு ந்தால் நான்
செய்தது தானே அவளும் செய்திருப்பாள்? அடக் கடவுளே ,மனைவி முன்னால் அவமானப்படுத்தப்
போகிறாளே , நான் என்ன செய்வேன்?நம்மை காக்கவைத்து பழிவாங்கவேண்டும் என்ற
நோக்கத்தோடுதானே அவள் எழுந்து உள்ளே சென்று விட்டாள் .... என்று மனதுக்குள்ளே குமைந்தான்.நெளிந்தான். தன்
மனைவி தங்கச்சிக்குன்னு கூடுதலாக
இருபதுகிராம் தங்கத்தைக் கொண்டு வராதிருந்தால் எந்தப் பிரச்சினையும் இல்லை.இங்கே என்னடான்னா தாலிச்சங்கிலியையும் கணக்கில் கொண்டு வருகிறானே ,அப்படி
என்றால் நாப்பது கிராமுக்கு சுங்கத் தீர்வைக் கட்டவேண்டுமா...?சுங்கத்தீர்வை கட்டறதுக்கு
பதிலா இந்தியாவிலேயே தங்கம் வாங்கி
இருக்கலாமே?இந்த அவஸ்தை பட்டு ஒருகுடிகாரி முன் தலைகுனிந்து நிற்கனுமா ? நிம்மதி இல்லாமல்
பெருமூச்சு விட்டான்.
உள்ளே ... மிக்சியில் அரைபடும் பழம் போல் அவள் மனது
அமைதியிழந்து உழன்றது .ஒரு டிசம்பர்
ஞாயிறன்று அவளுக்கும் இவனுக்கும் நிச்சயதார்த்தம் மதுரையில் அவள்வீட்டில்
நடந்தது.கல்யாணம் ஜனவரி இருபதில் கோவையில் இவன் வீட்டில் வைத்துக் கொள்வதென்று
உறுதி செய்யப் பட்டது.இவன் சென்னை யிலும்
,அவள் பெங்களூரிலும் ஒரே நிறுவனத்தில்
மென்பொறியர் களாக பணியாற்றினார்கள் .தனது திருமணம் உறுதி செய்யபட்ட மைக்கு
அவளுடன் பணியாற்றும் சக நண்பர்கள்
விரும்பியதால் அவ்வார சனியன்று ஒரு விருந்து கொடுத்தாள். அதில் விரும்பிய
நண்பர்களுக்கு பீர்விருந்து தரப்பட்டது.அந்நேரம் சென்னை யிலிருந்து இவன் அவளுக்கு கைபேசியில்
தொடர்பு கொண்டிரு க்கிறான்.தொடர்பு கிட்டவில்லை.மறுநாள் ஞாயிறன்று இவன் மீண்டும் தொடர்புகொண்டபோது எதிர்கால
இணையர்கள் பலவிசய ங்களை அளவளாவியபடி முந்தய நாள் அவள் நண்பர்களுக்கு விருந்து
கொடுத்தது பற்றி சொன்னாள்.விருந்தில் விரும்பியவர்கள் பீர் குடித்தார்கள் என்று
சொன்னாள்.அடுத்த நொடி இவன் தொடர்பை துண்டித்து விட்டான்.அவள் பதறி,பதைபதைத்து
மீண்டும்மீண்டும் தொடர்பு கொண்டாள்.இவனது கைபேசி இணைப்பு துண்டிக்கப்பட்டே இருந்தது.அவள்
சென்னை கிளை நண்பர்கள் மூலமும் இவனைத் தொடர்பு கொள்ளமுயன்றாள் .முடியவில்லை.
.அன்று மாலை நான்குமணி அளவில் அவளை உடனே மதுரை கிளம்பி வருமாறு அப்பா கட்டளை. அவள்
விளங்காமல் வெள்ளந்தியாகவே போய்ச் சேர்ந்தாள்.வீடு அசாதா ரண அமைதியில்
இருந்தது.யாரும் அந்த அதிகாலையில் முகம் கொடுத்து பேசவில்லை.அவள் பயணக் களைப்பில்
உறங்கி விட்டாள்.காலை பத்துமணி வாக்கில் அவள் வீட்டில் இவனது பெற்றோரும்,உறவினரும்
உணர்சிகரமாக பேசுவதும் , அவளது அம்மாவின் அழுகுரலும் கேட்டது.அவள் எழுந்து முகம்
கழுவி கதவோரம் எட்டிப் பார்த்தாள்.பேச்செல்லாம்
அவளது திருமண நிச்சயதார்த்தம் ரத்து செய்வது
குறித்து அழுகையும் ஆவேசமாக இருந்தது.அவள் ஓரளவு ஊகித்துக் கொண்டு அவளே போய்
என்ன
விவரம்
என்று கேட்டாள்.அவளது முடியை பிடித்து இழுத்துப் போய் அவளைக் காண்பித்து “நல்லா
பாருங்கண்ணே, இவள்முகம் பார்த்து சொல்லுங்கண்ணே ,இவளா குடிக்கிறவ... இப்படி
சொல்றவங்க நாக்கு அழுகிப்போகும்.நாங்க
ஒன்னும் எங்க பிள்ளையை அப்படி வளர்க்கல.!..’என்று சொல்லி தலையில் அடித்து அழுதாள்.மாப்பிளை யின் அப்பா “என்ன நடந்தது என்று நீயே சொல்லுமா..”என்றார். அவளது அப்பாவும் என்ன
நடந்தது என்று சொல்லச் சொன்னார்.
“சனிக்கிழமையன்று எனது அலுவலக
நண்பர்கள் கல்யாண நிச்சயதார்த்தம் நடந்ததற்காக விருந்து கேட்டார்கள். நான் ஹோட்டலுக்கு அழைத்துச் சென்று அவரரவர் விரும்பியதை சாப்பிடச்
சொன்னேன்.என்போன்றோர் குளிர்பானம் சாப்பிட்டோம். சில ஆண் நண்பர்கள் பீர்குடித்தனர்
.ஞாயிறன்று காலை மாபிள்ளை யோடு பேசும் போது பலவிசயங்கள் பேசினோம் .அப்போது
முன்தினம் நான் கொடுத்த
விருந்தில்நண்பர்கள் அவரவர் விருப் பத்துக்கு
என்னென்ன சாபிட்டர்கள் என்று சொல்லிக்கொண்டு இருக்கும் போதே அவர் போனை துண்டித்து
விட்டார்.அதற்குப்பின் நான் பலமுறை
தொடர்புகொண்டும் அவர் செல்அணைத்து வைக்கப் பட்டதாகவே.தகவல் வந்தது.சென்னையில் உள்ள
அவரது கிளை நண்பர்கள் மூலம் தொடர்பு கொண்டபோதும் அவர் கிடைக்கவில்லை.இதுதான்
நடந்தது.”
அப்பா
பேசினார் “கேட்டீங்கிலா மச்சான்,உங்க பையன் அரை குறையாக கேட்டுட்டு பேசுறதை நம்பி
நிச்சயதார்த்தத்தை ரத்து செய்யுங்கிறது ,என்னநியாயம் ? “
தாய் மாமா குறுக்கிட்டார்.”சரி
,அண்ணே இது பனைமரத்துக்கு கீழே இருந்து பால் சாப்பிட்ட கதை மாதிரி தான்!.இந்த
பிள்ளையை என் தங்கச்சியும் ,மச்சானும் கட்டுபாடோட வளர்த்தாங்க. வளர்ப்பிலும்
கெட்டிக்காரத்தனதிலும்குறையில்லை
உங்க
பைய்யன்கிட்டசொல்லுங்க. பொண்ணை யும் ,பையனையும் சந்திச்சு பேசவைப்போம் .நாம பெரியவங்க
அவசரப்பட்டு எந்த முடிவையும் எடுக்க
வேணாம்.நீங்களும் கவர்மென்ட் சர்வீசில் இருந்திருக்கீங்க.உங்களுக்கு இன்னொருத்தர்
சொல்லி தெரிய வேண்டியதில்ல.!”
மாப்பிளையின் அப்பா ஓரளவு சம்மதப்
பட்டவர்போல் தான் இருந்தார்.தாய் மாமா வற்புறுத்தலுக்கு இணங்க அவர் தனது மகனுடன் பேசினார்.பையன் திரும்பத் திரும்ப குடிகாரப் பெண் எனக்கு வேண்டாம்.இந்தப் பெண்ணைக்
கட்டிவைத்தாலும் வாழ மாட்டேனு ட்டான்.
தாய்மாமா கேட்டார் “.அப்போ பண்ணின நிச்சயத்தை நிறுத்தினா இந்தப் பொண்ணோட
வாழ்க்கை என்ன ஆகிறது.?”
“நான்
என்ன சொல்றது?இப்படிப்பட்ட பிள்ளையை பெத்ததற்கு நான் நொந்து சாகிரதைத் தவிர வேற
வழியில்லை.!”
அம்மா
ஆவேசமா குறுக்கிட்டா ,”அப்போ அண்ணே .உங்க பிள்ளை யால வாழ்க்கை இழந்த நாங்க சாகனுமா
?என்ன நியாயம்?”
பதில் சொல்லமுடியாமல் மாப்பிளையின்
அப்பா எழுந்தார்.
மாமா
சமாதானப்படுத்தி வருகிறோம் என்று போனவர்தான். வரவி ல்லை.அவர்கள் போனதும் ,என்னடி
நடந்துச்சு?நீ குடிச்சியாடி, என்று அம்மா ஆவேசமாய் அடித்தது.அப்பா தடுத்தார்..அடி
பொறுக்காமல் அவளும் ஆவேசமாய்; “அம்மா என்னை நம்புமா.நான் குடிக்க லைம்ம !நீ அப்பாவுக்கு என்னை பெத்தது எவ்வளவு உண்மையோ ,அந்தளவுக்கு நான் பீர் குடிக்கலைங்கிறதும்
உண்மையம்மா !” என்று சொன்ன அவளை அம்மாவும் அப்பாவும் கட்டி அழுதார்கள் .வீடு புயல்வீசி ஓய்ந்ததுபோல் சலனமற்று கிடந்தது. அவளை
வேலைக்குப் போக அனுமதிக்கவில்லை.அம்மாவுடன் பெங்களூர் சென்று ,அந்த வேலையை மூன்று
நாளுக்குள் முடித்துசம்பள கணக்கு நேர்செய்து திரும்பினார்கள். அவளதுவாழ்க்கை
தங்களு க்கு பாடம் என்று சொல்லி
தோழிகள்கண்ணீரோடு வழியனுப்பினர் .குடும்பத்துக்காக பொம்பளைப்
பிள்ளைகள்இப்படி நாடுவிட்டு நாடு வந்து
இராப்பகலாக கருமாயப் படுகிறார்களே என்று அம்மா கண் கலங்கினாள் மாப்பிள்ளை வீட்டிலிருந்து எந்த தகவலையும் பெறமுடியவில்லை .
“என்னை நம்பாத,சந்தேகம் கொண்ட மாப்பிளை வேண்டாம்.அவன் வந்தாலும் ,நான் சம்மதிக்க
மாட்டேன்! சந்தேகப் பிராணியோடு வாழமுடியாது.”என்றழுதாள் . .
.நடந்த விவரம் கேள்விப்பட்டு வந்து விசாரிக்கும் சொந்தம்
என்னும் மனம்கொத்திப் பறவைகளின் கொத்தலில் உணர்ச்சி வசப்பட்ட அப்பா பக்கவாதத்தால்
பாதிக்கப் பட்டார். அவரை மூன்று மாதம் மருத்துவமனையில் வைத்து மீட்டு எடுப்பதில்
பெரும்பாடு பட்டாள். .இந்த சமயத்தில்தான்
அப்பாவின் மரியாதை காப்பாற் றப்பட வேண் டும் என்று சிவில் சர்விஸ் தேர்வுகளுக்கு
வீட்டில் இருந்த படியே எழுதினாள் ..ஐ ஏ எஸ் ரேங் கிடைக்கவில்லை.ஐ ஆர் எஸ் மட்டுமே கிடைத்தது.ஒருநாள் பத்திரிகை
செய்திகளிலும் ,மின்னூடகங் களிலும் வந்த அவளது குடும்ப படங்களில் அவளது குடும்பம் மீண்டெழுந்தது.மனங்கொத்திகள்
புகழ் பாடும் கிளிகளாயினர்.. இப்போது யாரை எவ்வளவு நம்புவது;எந்த இடத்தில் வைப்பதுஎன்ற ஞானம்
வந்தது.பயிற்சி முடிந்ததும் சென்னை விமான நிலையத்தில் சுங்கத்தீர்வை அலுவலராக பணி
ஆற்றுகிறாள் .
எதோ கசப்பு மருந்தை விழுங்கியது போல் பெரு
மூச்சுவிட்டு மணி பார்த்தாள் , கால் மணி
நேரத்தைக் கடந்திருந்தது.இவன் இந்த மனைவியையாவது நம்பி ,நல்லா வைத்து
கொள்கிறானா...சரி, இவன் வாழ்க்கைபற்றி நமக்கு எதற்கு கவலை?பாவம் ,அந்த குழந்தைகள்
பசியோடு இருப்பார்கள். வெளியே வந்து இருக்கையில் அமர்ந்தாள் .உதவியாளரிடம்
பேசினாள். இவர்களை வரச் சொன்னாள்.கைகுழந்தையோடு வந்தவர்கள் வணங்கினர். அவளும் பதில் வணக்கம் சொல்லி உட்காரச் சொன்னாள்.இவனது
முகம் பேதி மருந்து குடித்தது போலிருந்தது.இவர்களிருவரும் துபையில் ஒரு
நிறுவனத்தில் வேலைசெய்வதாக ஆவணங்களிலிருந்து
அறிந்து கொண்டாள்
இந்த
தாலிச்செயின் புதியதா என்று கேட்டாள். “கல்யாணம் ஆனதிலிருந்து நாலு வருசமா இதைத் தான் போட்டுகிட்டி ருக்கேன்”.என்றாள் இவள்.
அவள் இவளது முகத்தை ஊடுருவிப் பார்த்தாள் .தான்
முன்பிருந் ததைவிட இவள் அப்பாவியாகத் தெரிந்தாள் . .”சரி,விமானத்தில் பயணம்
பண்ணும்போது சுங்கத்துறை விதிகளை நல்லா தெரிஞ்சி க்கணும்..தங்கம் என்றால் உடம்பில்
அணிந்துள்ள நகை எல்லாம் தங்கம் தான்.
நீங்கள் இங்கிருந்து அணிந்துகொண்டு போன தாலிச் செயின் என்று
நம்புகிறேன்.ஒருவரையொருவர் நம்பி நடந்துகொள் வதில்தான் வாழ்க்கை இயங்குகிறது.பெண்ணுக்கு நாற்பது
கிராம் தங்கம்;ஆணுக்கு இருபது கிராம்;இரு குழந்தைகளுக்கு தலா பத்து கிராம் தங்கம்
என்ற வகையில் உங்களை வெளியே அனுப்புகின் றேன்.இனி உடலில் அணியும் நகை எடையையும் கணக்கில் கொண்டு நடந்துக்குங்க!
“ இவன் தலை தொங்கியிருந்தது.
உதவியாளர் ஒரு சிறிய பார்சலைக் கொண்டு வந்தார்.
அதை வாங்கி அவள் அந்த பெண் குழந்தையிடம் கொடுத்து கன்னத்தைக் கிள்ளி பெயர்
என்னவென்று கேட்டாள் இவர்களது கடவுசீட்டு முதலான ஆவணங்களை தந்தாள்.இவர்கள் வணங்கி நன்றி
கூறும்போது இவன் பார்வை தரைநோக்கி இருந்தது.போகும்போது இவனது ஓரப்பார்வை அவளை
நோக்கியது.அவள் கம்பீரமாக நிமிர்ந்து புன்னகைத்தாள்.
No comments:
Post a Comment